இந்திய உருக்கு ஆணையம்
செய்ல் (SAIL)(தேபச: SAIL , இ.ப.ச: SAUD எனப்பரவலாக அறியப்படும் இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். 48,681 கோடி இந்திய ரூபாய்கள் ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக இலாபம் சம்பாதிக்கும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாகும். செயில் (SAIL) அரசுக்கு சொந்தமான நிறுவனம் மேலும் இந்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் உள்ளது.
வகை | பொது தேபச: SAIL இ.ப.ச: SAUD |
---|---|
நிறுவுகை | 1954 |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா[1] |
முதன்மை நபர்கள் | சோமா மண்டல்(தலைவர்) |
தொழில்துறை | உருக்கு |
வருமானம் | ▲ $9.629 பில்லியன் (2010)[2] |
நிகர வருமானம் | ▲ 1.520 பில்லியன் (2010)[2] |
மொத்தச் சொத்துகள் | ▲ $15.655 பில்லியன் (2010) |
பணியாளர் | 131,910 (2006) |
இணையத்தளம் | www.sail.co.in |
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.