பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள்
பொதுத்துறை நவரத்தின நிறுவனங்கள், இந்திய அரசின் கட்டுப்பாட்டில் ஏறத்தாழ 300 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. அவற்றுள் 181 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]
நிகர சொத்து மதிப்பு மற்றும் இலாபம் ஈட்டும் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்களை, மகா நவரத்தின நிறுவனங்கள், நவரத்தின நிறுவனங்கள் மற்றும் சிறு நவரத்தின நிறுவனங்கள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[2][3]
21 சூலை 2014 நிலவரத்தின் படி, இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் மகாநவரத்தினம் தகுதியும், 16 நிறுவனங்கள் நவரத்தினம் தகுதியும், 71 நிறுவனங்கள் சிறு நவரத்தினம் தகுதியும் கொண்டுள்ளது.[2] 71 சிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில் முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
மகா நவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்
தொகு- நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்
- இந்தியப் பங்குச் சந்தையில் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டிருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம், கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக ரூ. 20,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
- கடந்த மூன்று ஆண்டுகளில் நிறுவனத்தின் சராசரி ஆண்டு நிகர சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடிக்கு மேலாக இருந்திருக்க வேண்டும்.
- கடந்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வரிகளையும் செலுத்திய பிறகு, இலாபம் 2,500 கோடிக்கும் மேலாக இருந்திருக்க வேண்டும்.
- நிறுவனம் உலகளாவிய இருப்பு கொண்டிருக்க வேண்டும்.
மகா நவரத்தினம் தகுதி பெற்ற நிறுவனங்கள்
தொகுநவரத்தினம் தகுதிக்கான அம்சங்கள்
தொகு- சிறு நவரத்தினம் தகுதி கொண்டிருக்க வேண்டும்.
- கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனம், நிகர மதிப்பு மற்றும் வரிக்கு பிந்தைய நிகர லாபம், ஒரு பங்கின் ஈவுத்தொகை மற்றும் முலதனச் செயல்பாடு அடிப்படையில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
நவரத்தின தகுதி பெற்ற நிறுவனங்கள்
தொகு- பாரத் பெட்ரோலியம் நிறுவனம்
- பொறியாளர்கள் (இந்தியா) நிறுவனம்
- இந்துஸ்தான் பெட்ரோலியம்
- தேசிய அலுமினியம் நிறுவனம்
- தேசிய கனிம வள நிறுவனம்
- ஆயில் இந்தியா லிமிடெட்
- இந்திய மின் கட்டமைப்பு நிறுவனம்
- ஊரக மின்வசதியாக்க கழக நிறுவனம்
- இந்திய கொள்கலன் நிறுவனம்
- இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட்
- மகாநகர் டெலிபோன் நிகம்
- தேசிய கட்டிடக் கட்டுமானக் கழகம்
- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
- எரிசக்தி நிதி நிறுவனம்
- ராஷ்டிரிய இரும்பு நிறுவனம்
- இந்திய கப்பல் போக்குவரத்து கழகம்
சிறு நவரத்தின நிறுவனங்கள்
தொகுசிறு நவரத்தினம் நிறுவனங்களின் நிதி நிலைமை, நிகர மதிப்பு, வருவாய், ஈட்டும் இலாப அடிப்படையில், முதல் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டாக வகைப்படுத்தியுள்ளனர்.
முதல் வகை சிறு நவரத்தின நிறுவனங்கள்
தொகு- இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
- பால்மர் லாறீ நிறுவனம்
- பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்
- பிஎஸ்என்எல்
- மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம்
- இந்தியக் கடல் தூர்வாரும் நிறுவனம்
- கார்டன் ரீச் கப்பல் கட்டும் நிறுவனம்
- இந்துஸ்தான் காப்பர் நிறுவனம்
- இந்துஸ்தான் செய்தித்தாள் உற்பத்தி நிறுவனம்
- வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சி நிறுவனம்
- இந்திய அரிய வகை கனிமங்கள் நிறுவனம்
- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளர்ச்சி முகமை
- இர்க்கொன் நிறுவனம்
- மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம்
- இந்திய மாங்கனீசு நிறுவனம்
- மிஸ்ரா உலோகக் கனிம நிறுவனம்
- தேசிய விதைகள் நிறுவனம் (National Seeds Corporation)
- நுமலிகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம்
- பவன் ஹன்ஸ் நிறுவனம்
- ரெயில்டெல்
- இராஷ்டிரிய பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ்
- வடக்கு நிலக்கரி வயல்கள்
- மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம்
- தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
- மேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம்
- மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம்
- தேசிய சிறுதொழில் கழகம்
- ஆந்திரிக்சு கழகம்
- பாரத் கற்கரி நிறுவனம்
- பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்
- பிரிட்ஜ் மற்றும் ரூப் நிறுவனம் (இந்தியா)
- கொச்சி கப்பல் கட்டுந்துறை
- எண்ணூர் துறைமுகம்
- கோவா கப்பல் கட்டுந்துறை
- இந்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
- இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்
- குதிரைமுக இரும்பு கனிம நிறுவனம்
- மங்களூர் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம்
- உலோகங்கள் மற்றும் கனிம வணிகக் கழகம்
- தேசிய உரங்கள் நிறுவனம்
- தேசிய புனல் மின் கழகம் என் எச் பி சி லிமிடெட்
- வடகிழக்கு மின்சக்தி கழகம்