சூரிய ஆற்றல் நிறுவனம், இந்தியா

இந்தியச் சூரிய ஆற்றல் நிறுவனம், இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின்[1] கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.[2] [3] [4] இந்நிறுவனம் சூரிய ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

இந்தியச் சூரிய ஆற்றல் நிறுவனம்
வகைபொதுத்துறை நிறுவனம்
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
தொழில்துறைசூரிய ஆற்றல்
தாய் நிறுவனம்புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இந்தியா

2024 நிதி ஆண்டில் இந்தியச் சூரிய ஆற்றல் நிறுவனம் ரூபாய் 13,035 கோடி விற்றுமுதல் செய்து, ரூபாய் 436 கோடி இலாபம் ஈட்டியதால், ஆகஸ்டு 2024ல் இந்நிறுவனம் 23வது நவரத்தின நிறுவனமாக இந்திய அரசு அறிவித்தது.[5][6][7]

பின்னணி

தொகு

2011ல் இலாப நோக்கமற்ற முறையில் நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் நிறுவனம், 2015ஆம் ஆண்டில் இந்திய நிறுவனச் சட்டம்த்தின் பிரிவு 3ன் கீழ் லாப நோக்கமுடைய நிறுவனமாக மாற்றப்பட்டதுடன், இதன் பெயரை இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனம் என மாற்றப்பட்டது.

  • இந்நிறுவனம் தனது சொந்த சூரிய ஆற்றல் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனை செய்தல்.
  • சூரிய ஆற்றல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கருவிகளை தயாரித்தல்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. MINISTRY OF NEW AND RENEWABLE ENERGY
  2. "Solar Energy Corporation of India plans to set up more solar plants - The Economic Times". Economictimes.indiatimes.com. 2016-05-03. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016.
  3. Our Bureau (2015-06-24). "Solar Energy Corporation of India to be renamed | Business Line". Thehindubusinessline.com. பார்க்கப்பட்ட நாள் 2016-09-05.
  4. "Delhi metro signs mou with solar energy corporation of India, to jointly take up off site solar power project update". Delhimetrorail.com. 2013-09-17. பார்க்கப்பட்ட நாள் 5 September 2016.
  5. Solar Energy Corporation, Railtel, SJVN to be Navratna CPSEs
  6. SECI Attains Navratna Status
  7. SECI Attains Navratna Status