பாரத மிகு மின் நிறுவனம்
பாரத மிகு மின் நிறுவனம் (Bharat Heavy Electrical Limited- BHEL, பாரத் ஃகெவி எலெக்ட்ரிகல்சு லிமிடெட்) (முபச: 500103 , தேபச: BHEL ) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம்.
வகை | பொதுத்துறை நிறுவனம் (முபச: 500103 ) |
---|---|
நிறுவுகை | 1956 |
நிறுவனர்(கள்) | இந்திய அரசு |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா மற்றும் 70 நாடுகளில்[1] |
முதன்மை நபர்கள் | அடுல் சோப்டி (தலைவர் & நிஇ)[2] |
தொழில்துறை | பொறியியல் & உற்பத்தி |
உற்பத்திகள் | மின் உற்பத்தி, தொழில், கொதிகலன் உற்பத்தி போக்குவரத்து, மறு சுழற்சி ஆற்றல், எரி எண்ணெய் மற்றும் எரிவாயு, மின் கடத்திகள் |
வருமானம் | ▲ ₹43,451 கோடி (US$5.4 பில்லியன்) (2010)[3] |
நிகர வருமானம் | ▲ $961 மில்லியன் (2010) |
மொத்தச் சொத்துகள் | ▲ $10.816 பில்லியன் (2010)[3] |
பணியாளர் | 46,274 (2010)[3] |
இணையத்தளம் | www.bhel.com |
இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வணிகக் கோட்டங்கள் (POWER SECTORS) உருவாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது. (INTERNATIONAL OPERATIONS DIVISION) . மின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான பாய்லர் எனப்படும் கொதிகலன், டர்பைன் எனப்படும் சுழலிகள், டர்போ செனரேட்டர்கள் (சுழலி மின்னாக்கிகள்), நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் (Electro Static Precipitators- ESP) போன்ற பல்வேறு பெருவகை மின்னுருவாக்குத் துணைகருவிகளையும், பைஞ்சுதை (சிமென்ட்டு), எண்ணெய் தூய்மைப்படுத்து நிலையங்கள் போன்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது.
தமிழில் "பாரத மிகுமின் தொழிலகம்" என்றும் சுருக்கமாக "பெல்" (BHEL) என்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகின்றது.தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. தற்போது திருமயத்திலும் மற்றொரு உற்பத்திப் பிரிவினை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்சிராப்பள்ளி பிரிவு
தொகுதிருச்சிராப்பள்ளி பெல் பிரிவில் உயர் அழுத்தக் கொதிகலன்கள் படைக்கப்படுகின்றன. இந்தக் கொதி கலன்கள், இருநூறு மெகா வாட்டு முதல் எழுநூறு மெகா வாட்டுகள் வரை மின்சாரம் படைப்பதற்குத் தேவையான் நீராவியை உருவாக்கி வழங்கும். உயர் அழுத்தக் கொதிகலன்கள் தவிர, அணுமின் நிலையங்களுக்குத் தேவையான வெப்பப் பரிமாற்றிகள், பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், குமிழ் விடும் பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், இணை சுழற்சி பாய்மப் படுகை எரிப்புக் கொதிகலன்கள், வெப்ப மீட்பு நீராவி உற்பத்திக் கலன்கள், தொழிற் சாலைகளுக்குத் தேவையான தனித்தேவை மின் உருவாக்கு நிலையங்கள், தொழிலகங்களுக்குத் தேவையான வெப்பப் பரிமாற்றிகள்,தொழிலக வால்வுகள் போன்றவையும் இங்கே படைக்கப்படுகின்றன. இந்த பிரிவில் மட்டும் ஏறத்தாழ பத்தாயிரம் நிரந்தர ஊழியர்கள் பணி புரிகிறார்கள்.
திருச்சிராப்பள்ளி பெல் பிரிவின்கீழ் செயல்படும் பிற அமைப்புகள்
- பற்ற வைப்பு ஆராய்ச்சி மையம் ( WRI), திருச்சி
உலோகங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பற்றவைப்பு பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் இங்கு நடைபெற்று வருகின்றன.இத்துடன் பற்ற வைப்புத் தொழிலில் ஈடுபடுவோருக்கான பயிற்சிகளும் இங்கே அளிக்கப்படுகின்றன.மேலும் பற்ற வைப்பு பற்றிய ஆலோசனைகளும் வழங்கப் படுகின்றன.
- நிலக்கரி ஆராய்ச்சி மையம் ,திருச்சி
- இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலை - எஃகுக் குழாய்கள் உற்பத்தி - திருச்சி
- சென்னையில் உள்ள குழாய் மையம்
- பஞ்சாப் மாநிலம், கோயிந்த்வாலில் உள்ள தொழிலக வால்வுகள் படைப்பு ஆலை-தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான கன ரக வால்வுகள் இங்கே உற்பத்தி செய்யபப்டுகின்றன
- திருமயம்
திருமயம் பிரிவு
தொகுபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் புதிய தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கொதிகலங்களுக்கான குழாய்ப் பகுதிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
திருச்சி பெல் பிரிவின் சமூகப் பொறுப்புணர்வு
தொகுஇந்நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள நகரியத்தில்( ஊழியர் குடியிருப்பு - பெயர் -கைலாசபுரம்) மனவளர்ச்சி குன்றிய , கேட்கும் திறன் குறைந்த குழந்தைகளுக்கான பள்ளி (அறிவாலயம்) ஒன்று இந்நிறுவனத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகிறது.
ஹரித்வார் பிரிவு
தொகுஇதன்கீழ் இரண்டு உற்பத்தித் தொழிலகங்கள் உள்ளன
- கனமின் சாதன உற்பத்தி ஆலை -Heavy Electrical Equipment Plant (HEEP)
நீராவி மற்றும் வாயுச் சுழலிகள் ,தற்போ ஜெனரேட்டர்கள் ,புனல் சுழலிகள் ,புனல் மின்னுற்பத்தி நிலையங்கள் , மாறு மின்னோட்டம் மற்றும் நேர் மின்னோட்ட மோட்டார்கள் போன்றவை இங்கே படைக்கப்படுகின்றன.
- மத்திய பவுண்டரி மற்றும் போர்ஜிங் ஆலை- Central Foundry Forge Plant (CFFP)
மிகப் பெரிய வார்ப்படங்கள் இங்கே படைக்கப் படுகின்றன
போபால் பிரிவு
தொகுஇராணிப்பேட்டை பிரிவு
தொகுகுழாய் மையம் - சென்னை
தொகுஇதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "For Website" (PDF). Archived from the original (PDF) on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.
- ↑ "www.bhel.com". Archived from the original on 2016-02-01. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|formate=
(help) - ↑ 3.0 3.1 3.2 "bhel.com". bhel.com. Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2010-12-22.