பாரத் மின்னணுவியல் நிறுவனம்
(பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ('Bharat Electronics Limited (சுருக்கமாக:BEL) இந்திய அரசின் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இது அதிக இலாபம் ஈட்டும் மகா நவரத்தின நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசுக்கு சொந்தமான இந்நிறுவனம் பாதுகாப்புப் படைகளுக்க்கான, வான்புறப்புக் கருவிகள், ரேடார்கள், மின்னணு போர்க் கருவிகள் மற்றும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உற்பத்தி செய்கிறது. இதன் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது.[2] இந்நிறுவனம் 1954ல் நிறுவப்பட்டது.[3]
வகை | பொதுத்துறை நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1954 |
நிறுவனர்(கள்) | இந்திய அரசு |
தலைமையகம் | பெங்களூர், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | பானுபிரகாஷ் சிறீவத்சவா (பெருந்தலைவர் & மேலாண்மை இயக்குநர்) |
தொழில்துறை |
|
உற்பத்திகள் |
|
வருமானம் | கூடுதல் ₹17,404.18 (US$220) (2023)[1] |
இயக்க வருமானம் | கூடுதல் ₹3,922.91 (US$49) (2023)[1] |
நிகர வருமானம் | கூடுதல் ₹2,986.24 (US$37) (2023)[1] |
மொத்தச் சொத்துகள் | கூடுதல் ₹35,054.48 (US$440) (2023)[1] |
மொத்த பங்குத்தொகை | கூடுதல் ₹13,581.99 (US$170) (2023)[1] |
உரிமையாளர்கள் | இந்திய அரசு (51.14%)
பரஸ்பர நிதி (24.43%) வெளிநாட்டு முதலீடுகள் (15.73%) இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (7.5%) பரோடா வங்கி (4%) |
பணியாளர் | 9,612 (மார்ச், 2019) |
இணையத்தளம் | bel-india.in |
தயாரிப்புகள்
தொகு- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்[4]
- வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை கருவிகள்[5]
- போக்குவரத்து சமிக்ஞை கருவிகள்[6]
- ரேடார்கள்
- தொலைத்தொடர்பு கருவிகள்
- தகவல் தொடர்பு கருவிகள்
- மின்னணு போர்க் கருவிகள்
- ஏவுகணைகள்
- ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு
- டாங்கி மின்னணுக் கருவிகள்
- பயோமெட்ரிக் கருவிகள்
- உருவகப்படுத்தும் கருவிகள்
பாரத் எலக்டிரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தியக் கிளைகள்
தொகு- பெங்களூர், தலைமையிடம் & தொழிற்சாலை, கர்நாடகம்
- சென்னை, தமிழ்நாடு
- பஞ்ச்குலா, அரியானா
- கோத்வார், உத்தராகண்டம்
- காசியாபாத், உத்தரப் பிரதேசம்
- புனே, மகாராட்டிரம்
- ஐதராபாத், தெலங்காணா
- நவி மும்பை, மகாராட்டிரம்
- மச்சிலிப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம்
- மண்டல அலுவலகங்கள்
- வெளிநாட்டு அலுவலகங்கள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Financial Results 31.03.2023".
- ↑ "Decisions on exclusion". Norges Bank Investment Management. 24 January 2023. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.
- ↑ "Bharat Electronics Limited | Facilities | NTI". www.nti.org. பார்க்கப்பட்ட நாள் 2020-08-02.
- ↑ "Our EVMs are 'non-tamperable': BEL CMD". தி எகனாமிக் டைம்ஸ். 1 June 2019. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/our-evms-are-non-tamperable-bel-cmd/articleshow/69612219.cms.
- ↑ "General Election to the State Legislative Assembly of Bihar, 2015- Use of EVMs with Voter Verifiable Paper Audit Trail System(VVPAT)-reg" (PDF).
- ↑ M, Raghuram (2007-10-05). "Bangalore to have new traffic control system". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Bangalore-to-have-new-traffic-control-system/article14851063.ece.