நவி மும்பை
நவி மும்பை (Navi Mumbai, மராத்தி: नवी मुंबई, IAST: Navi Muṃbaī) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் மேற்கு கடலோரம் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் துணை நகரமாகும். 1972ஆம் ஆண்டு மும்பையின் இரட்டை நகரமாக நவி மும்பை மாநகராட்சியின் கீழ் 163 சதுர கிலோமீட்டர்கள் (63 sq mi)பரப்பிலும் மற்றும் மொத்தம் 344 சதுர கிலோமீட்டர்கள் (133 sq mi) பரப்பளவிலும் திட்டமிடப்பட்டது.[1] தாணே சிறுகுடாவின் கிழக்கில் தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் நவி மும்பை அமைந்துள்ளது. நகரத்தின் எல்லைகளாக வடக்கில் தாணே அருகில் உள்ள ஐரோலியும் தெற்கில் உரான் பகுதியும் உள்ளன. இதன் நீளம் மும்பையின் நீளத்தை ஒத்துள்ளது. வாஷி கடற்பாலமும் ஐரோலி கடற்பாலமும் தீவு நகரமான மும்பையுடன் நவி மும்பையை இணைக்கிறது.
நவி மும்பை नवी मुंबई | |
21ஆம் நூற்றாண்டின் நகரம் | |
— நகரம் — | |
அமைவிடம் | 19°02′N 73°01′E / 19.03°N 73.01°Eஆள்கூறுகள்: 19°02′N 73°01′E / 19.03°N 73.01°E |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | தாணே மாவட்டம், ராய்கர் மாவட்டம் |
ஆளுநர் | பகத்சிங் கோசியாரி |
முதலமைச்சர் | உத்தவ் தாக்கரே |
மாநகராட்சி ஆணையர் | விஜய் நகாதா |
மேயர் | சாகர் நாய்க் |
மக்களவைத் தொகுதி | நவி மும்பை नवी मुंबई |
மக்கள் தொகை • அடர்த்தி |
2,600,000 est. (2008[update]) • 4,332/km2 (11,220/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
344 கிமீ2 (133 சதுர மைல்) • 10 மீட்டர்கள் (33 ft) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.nmmconline.com |
நவி மும்பை மாநகராட்சியின் சின்னம் |
நவி மும்பையின் விலைமிக்க கட்டிடங்கள் வாஷி, நெருல் ஆகிய பகுதிகளாகும். நவி மும்பை பன்னாட்டு வானூர்தி நிலையம் திட்டமிடப்பட்ட பினர் அண்மையிலுள்ள கார்கர் மற்றும் பன்வெல் பகுதிகளும் பெரும் குடியிருப்புக் கட்டமைப்பு வளர்ச்சியை காண்கின்றன. நவி மும்பையின் மக்கள்தொகையான 2,600,000 பேரில் ஏறத்தாழ 800,000 பேர் நெருலிலும் 700,000 பேர் வாஷியிலும் ஏனையவர் சிபிடி பேலாப்பூர், கார்கர், சான்படா, ஐரோலி, கன்சோலி, கோபர் கைர்னே ஆகிய பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்தொகு
வெளியிணைப்புகள்தொகு
விக்கிப்பயணத்தில் Wikivoyage:Maharashtra#Q61445|]]Maharashtra]] என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. - Navi Mumbai Municipal Corporation
- NMMT Official Website
- CIDCO - City and Industrial Development Corporation