மும்பை பெருநகரப் பகுதி
மும்பை பெருநகரப் பகுதி (Mumbai Metropolitan Region) என்பது மும்பை நகரத்தையும், அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் சேர்த்த பெருநகர் பகுதியைக் குறிக்கிறது. இது ஏழு மாநகராட்சிகளையும், 15 நகராட்சிகளையும் கொண்டது. இந்தப் பகுதியை மும்பை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நிர்வாகிக்கிறது. இந்தப் பகுதிக்குள் போக்குவரத்து, கட்டுமானம், வளர்ச்சி, வீட்டுவசதி உள்ளிட்ட வேலைகளை வளர்ச்சிக் குழுமம் மேற்கொள்ளும். இந்தப் பகுதி 4,355 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தப் பகுதியில் ஏறத்தாழ 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இந்தப் பகுதிக்கான ரயில் போக்குவரத்திற்கு மும்பை புறநகர் ரயில்வே உதவுகிறது.
Mumbai Metropolitan Region (MMR)
मुंबई महानगरीय क्षेत्र | |
---|---|
நாடு | இந்தியா |
State | மகாராட்டிரம் |
மாவட்டங்கள் | மும்பை மாவட்டம் மும்பை புறநகர் மாவட்டம் தானே மாவட்டம் ராய்காட் மாவட்டம் |
பரப்பளவு | |
• மாநகரம் | 4,355 km2 (1,681 sq mi) |
மக்கள்தொகை (2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு) | |
• நகர்ப்புறம் | 1,24,78,447 |
• நகர்ப்புற அடர்த்தி | 20,694/km2 (53,600/sq mi) |
• பெருநகர் | 2,09,98,395 |
• பெருநகர் அடர்த்தி | 4,764/km2 (12,340/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5.30 (IST) |
மாநகராட்சி | மக்கள் தொகை (2001 கணகெடுப்பு) | மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பு) | பரப்பளவு (km²) | மக்கள் அடர்த்தி (per km²) |
---|---|---|---|---|
பெருநகரமும்பை மாநகராட்சி | ||||
நவி மும்பை மாநகராட்சி | ||||
தானே மாநகராட்சி | ||||
கல்யாண் - டோம்பிவிலி மாநகராட்சி | ||||
வசாய்-விரார் | ||||
மீரா-பயந்தர் | ||||
பிவண்டி-நிசாம்பூர் மாநகராட்சி | ||||
உல்லாஸ்நகர் | ||||
Totals |
இணைப்புகள்
தொகு- MMRDA cities table பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Mumbai Railway Station Names
சான்றுகள்
தொகு