இந்தியா நிலக்கரி நிறுவனம்

இந்தியா நிலக்கரி நிறுவனம் (Coal India Limited) (முபச533278 , தேபசCOALINDIA ) மேற்கு வங்காளம், கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இந்தியாவின் நிலக்கரி உற்பத்திக்கு ஏறத்தாழ 85% பங்களிக்கிறது.[1] இது, நிலக்கரி உற்பத்தியில் உலகிலேயே மிக பெரிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில், ஏறத்தாழ 3,97,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்தியா நிலக்கரி நிறுவனம்
வகைநிலக்கரிச் சுரங்கத் தொழில்
நிறுவுகை1975
தலைமையகம்10 நேதாஜி சுபாஷ் சாலை, கொல்கத்தா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்என்.சி. ஜா
தலைவர் மற்றும் நிருவாக இயக்குனர்
தொழில்துறைநிலக்கரி, பழுப்பு நிலக்கரி
உற்பத்திகள்நிலக்கரி
வருமானம் 52,188 கோடி (US$6.5 பில்லியன்) (2009-10)
நிகர வருமானம் 9,622 கோடி (US$1.2 பில்லியன்) (2009-10)
பணியாளர்397,138 (31 March 2010)
இணையத்தளம்Coalindia.in

இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களில், எட்டு மகாநவரத்தின நிறுவனங்களில் ஒன்றாக இந்திய நிலக்கரி நிறுவனம் விளங்குகிறது. [2]

கோல் இந்தியாவின் துணை நிறுவனங்கள்
துணை நிறுவனத்தின் பெயர் ஊழியர்கள்
(31-மார்ச்-2015 முடிய)
வருவாய்
( பில்லியன் 2012 - 13)
நிலக்கரி உற்பத்தி(டன்கள் (மில்லியனில்)
Coking Coal Non-Coking Coal மொத்த நிலக்கரி உற்பத்தி
பாரத் எரி நிலக்கரி (Coke Coal) 56,051 89.37 26.970 4.243 31.213
மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் 45,011 92.38 16.156 31.905 48.061
கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் 68,681 97.40 0.043 33.868 33.911
மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனம் 22,259 120.93 - 107.894 107.894
வடக்கு நிலக்கரி வயல்கள் 16,226 99.86 - 70.021 70.021
தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் 67,800 176.48 0.157 118.062 118.219
மேற்கு நிலக்கரி வயல்கள் நிறுவனம் 50,071 74.23 0.330 41.957 42.287
மத்திய சுரங்கத் திட்டம் மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (CMPDI) 3,629 6.05 - - -
கோல் இந்தியா ஆப்பிரிக்கா நிறுவனம் - - - - -
வடகிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் 2,027 - - 0.605 0.605
தன்குனி நிலக்கரி வளாகம் 474 - - - -
கோல் இந்தியா நிறுவனத்தின் தலையமையகம் 868 13.78 - - -
மொத்தம் 333,097 770.49 43.656 408.555 452.211

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Coal India Limited at a glance". Archived from the original on 2017-11-09. பார்க்கப்பட்ட நாள் 2018-02-22.
  2. DEPARTMENT OFPUBLIC ENTERPRISES