சுக்மா மாவட்டம்
சுக்மா மாவட்டம் (Sukma district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். மாநிலத்தின் தெற்கு முனையில், பஸ்தர் கோட்டத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். அடர்ந்த காடுகளால் சூழ்ந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சுக்மா நகரமாகும்.
சுக்மா | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | மத்திய இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
கோட்டம் | பஸ்தர் கோட்டம் |
நிறுவப்பட்ட நாள் | 16 சனவரி 2012[1] |
தலைமையிடம் | சுக்மா |
வட்டங்கள் | 4[2] |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | ஸ்ரீ ஹரீஸ்.எஸ், இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | ஸ்ரீ சுனில் சர்மா, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,897.79 km2 (2,277.15 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 2,70,821 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | sukma |
சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் அமைந்த 78 இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும்.
நிர்வாக வசதிக்காக பஸ்தர் மாவட்டத்தின் தெற்குப் பகுதிகளைப் பிரித்து சுக்மா மாவட்டம் 16 சனவரி 2012 அன்று நிறுவப்பட்டது.
புவியியல்
தொகுஇதன் அமைவிடம் 18°24′0″N 81°40′0″E / 18.40000°N 81.66667°E ஆகும்; கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 197 மீ உயரத்தில் உள்ளது.[5]
மாவட்ட எல்லைகள்
தொகு5635.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்மா மாவட்டம், வடக்கில் பஸ்தர் மாவட்டம், வடகிழக்கில் தந்தேவாடா மாவட்டம், மேற்கில் பிஜப்பூர் மாவட்டம் தென்கிழக்கில் ஆந்திர பிரதேசம், தெற்கில் தெலங்கானா மற்றும் கிழக்கில் ஒரிசாவை எல்லைகளாக கொண்டது.[6][7] பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்று. மாவோயிஸ்டு போராளிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட எண்பத்து மூன்று இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும்.[8]
அரசியல்
தொகுசுக்மா மாவட்டம் பஸ்தர் மக்களவை தொகுதியிலும், கோண்டா சட்டமன்ற தொகுதியில் அடங்கியுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகு5635.79 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சுக்மா மாவட்டம் பஸ்தர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் கோண்டா, சுக்மா மற்றும் சிந்துகர் என மூன்று வருவாய் வட்டங்கள் கொண்டது. சுக்மா மாவட்டம் 379 கிராமங்களும், 132 கிராமப் பஞ்சாயத்து மன்றங்களையும், மூன்று வட்டார வளர்ச்சி அலுவலகங்களும், மூன்று நகரப் பஞ்சாயத்துகளும், சுக்மா வன உட்கோட்டமும் கொண்டுள்ளது.[3][9]
மக்கள் வகைப்பாடு
தொகுஇம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,49,841 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,22,448 மற்றும் பெண்கள் 1,27,393 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 1016 வீதம் உள்ளனர். பழங்குடி இன மக்கள்தொகை 1,73,714 ஆக உள்ளது. பட்டியல் சமூக மக்கள்தொகை 10,859 ஆக உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 45 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 36.29% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 49.69% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.33% ஆகவும் உள்ளது.[10]
போக்குவரத்து
தொகுசுக்மா நகரம் தேசிய நெடுஞ்சாலை எண் 221 மூலம் நாட்டின் பல பகுதிகளை இணைக்கிறது.
சிறப்புக் கூறுகள்
தொகு- சபரி ஆறு
- ஜாத்ரா ஆறு
மிகவும் பிற்பட்ட பகுதியாக இருப்பினும் கல்வி மற்றும் படிப்பறிவு வீதங்கள் சிறப்பாக உள்ளன. நாட்டிலேயே மிகக் கூடுதலான காட்டுப்பகுதி நிறைந்த மாவட்டமாக (4000+ ச.கிமீ) விளங்குகிறது. இங்குள்ள சபரி ஆற்றில் கிடைக்கும் தூயநீர் இறால்கள் (ஜிங்கா) மிகவும் பிரபலமானவை. வனப்பொருட்களான தென்டுப்பட்டா, சிரோஞ்சி, புளி, மகுவா, அர்ரா மற்றும் பிசின் ஆகியவற்றிற்காகவும் புகழ் பெற்றது.
மாவோயிஸ்ட் போராளிகள்
தொகுநக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு இந்திய மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும்.[11][12] மேலும் பஸ்தர் கோட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழும் ஏழு மாவட்டங்களில் சுக்மா மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தில் நக்சல்-மாவோயிஸ்ட் போராளிகளுக்கும் காவல்துறையினருக்கும் அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது.[13][14][15] [16] [17]
தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான நக்சலைட்-மாவோயிச பொதுவுடமைக் கட்சித் தோழர்கள் ஏப்ரல் 21, 2012 அன்று ஓர் சிற்றூர் கூட்டத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சுக்மா மாவட்டத்தின் ஆட்சியர் அலெக்சு பால் மேனனை மாலை நேரத்தில் கடத்திச் சென்று பிணைக்கைதியாக சிறை வைத்தனர். அவருடன் உடனிருந்த இரு தனிப் பாதுகாப்புக் காவலர்களை சுட்டுக் கொன்றனர்.[18] பாளையங்கோட்டையில் பயின்ற அலெக்சை விடுவிக்க இரண்டு பெண்கள் உட்பட 17 தோழர்களை சிறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும், தங்களுக்கு எதிரான "பசுமைத் தேடல் நடவடிக்கையை" நிறுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் பஸ்தரில் உள்ள பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வேண்டும் என்பன[19] அவர்களது கோரிக்கையாக உள்ளது.
சிவப்பு தாழ்வாரப் பகுதிகளில் ஒன்றான சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் தாக்குதல்களால் 24 ஏப்ரல் 2017 அன்று 25 மத்திய சேமக் காவல் படை வீரர்கள் கொல்லபப்பட்டனர்.[20][21]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://sukma.gov.in/en/history/
- ↑ https://sukma.gov.in/en/tehsil/
- ↑ 3.0 3.1 https://sukma.gov.in/en/about-district/whos-who/
- ↑ 4.0 4.1 https://sukma.gov.in/en/demography/
- ↑ http://www.fallingrain.com/world/IN/37/Sukma.html Map and weather of Sukma
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
- ↑ http://www.mapsofindia.com/maps/chhattisgarh/districts/sukma.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
- ↑ http://www.dantewada.gov.in/Sukma.html பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் District Sukma at A Glance
- ↑ Centre to declare more districts Naxal-hit
- ↑ The Union Government of India bring to 20 more Districts in Naxal-hit States
- ↑ Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
- ↑ "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
- ↑ http://www.maalaimalar.com/2016/03/01103943/8-Maoists-killed-in-gunbattle.html பரணிடப்பட்டது 2016-03-02 at the வந்தவழி இயந்திரம் சத்தீஸ்கர் - தெலுங்கானா மாநில எல்லைப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை: 8 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்]
- ↑ சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
- ↑ "Maoists kill two security guards, kidnap Collector in Chhattisgarh". த இந்து. ஏப்ரல் 21, 2012. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 29, 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Collector Menon kidnap: No breakthrough in talks". பிடிஐ செய்தி நிறுவனம். எக்சுபிரசு பஸ். ஏப்ரல் 28, 2012. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 29, 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Maoists massacre 25 CRPF troopers". Archived from the original on 2017-04-25. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.
- ↑ "Sukma Attack: 25 CRPF Men Killed". Archived from the original on 2017-05-09. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.