லோஹர்தக்கா மாவட்டம்

லோஹர்தக்கா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் லோஹர்தக்கா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] 1983 ஆம் ஆண்டில் ராஞ்சி மாவட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த மாவட்டம் 23 ° 30 'மற்றும் 23 ° 40' வடக்கு அட்சரேகைகளுக்கும் 84 ° 40 'மற்றும் 84 ° 50' கிழக்கு தீர்க்கரேகைகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் 1491 கிமீ² பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது ஜார்கண்டின் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும்.

பொருளாதாரம்தொகு

இந்த மாவட்டத்தில் வசிப்பவர்கள் முக்கியமாக விவசாயம், வன விளைபொருள்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பருவகால இடம்பெயர்வு ஆகியவற்றை சார்ந்துள்ளது. 80% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். நெற்பயிர்ச் செய்கை பிரதான இடம் பெறுகிறது . சிறிய பாசனப் பகுதியில் கோதுமை வருடாந்திர உணவுப் பொருளைப் பூர்த்தி செய்ய வளர்க்கப்படுகிறது. இந்த மாவட்டம் ஜாம்சுட்பூர் , ரூர்கேலா மற்றும் கல்கத்தா போன்ற பெரிய காய்கறி சந்தைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மாவட்ட கிராம மக்கள் உழவுக்கு விலங்குகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் ஆடுகளையும் கோழி போன்ற  பறவைகளையும் வளர்க்கின்றனர். மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 32-35% வனப்பகுதி உள்ளது. ஒரு வீட்டுக்கு சராசரியாக 1.65 ஹெக்டேர் நிலம் உள்ளது. தனிநபர் விவசாய நிலம் சுமார் 0.28 ஹெக்டேயர் ஆகும்.

மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளைத் தவிர பெரும்பாலான கிராமங்கள் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில குக்கிராமங்களுக்கான சாலைகள் இல்லை. ராம்கர் மாவட்டத்தில் உள்ள பட்ராட்டு வெப்ப மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. 354 கிராமங்களில் 25 மட்டுமே கிராமப்புற மின்மயமாக்கலைக் கொண்டுள்ளன. கிராமப்புறங்களில் நீர் வழங்கல் முறை இல்லை. கிராமவாசிகள் தங்கள் குடிநீரை குழாய் கிணறுகளிலிருந்து பெற்றுக் கொள்கின்றனர்.

2006 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் லோஹர்டாகாவை நாட்டின் 250 பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக பெயரிட்டது.[2] தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதி பெறும் ஜார்க்கண்டில் உள்ள 21 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[2]

புள்ளிவிபரங்கள்தொகு

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி லோஹர்தக்கா மாவட்டத்தில் 461,790 மக்கள் வசிக்கின்றனர்.[3] இது சனத்தொகை அடிப்படையில் இந்தியாவில் 640 மாவட்டங்களில் 549 இடத்தைப் பெறுகின்றது. மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு 310 மக்கள் (800 / சதுர மைல்) மக்கள் தொகை அடர்த்தி உள்ளது. 2001-2011 காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 26.67% ஆகும். லோஹர்தக்காவில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கும் 985 பெண்கள் பாலின விகிதம் உள்ளது. இந்த மாவட்டத்தின் கல்வியிறிவு 68.29% ஆகும்.[3]

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் போது மாவட்டத்தில் 46.00% மக்கள் இந்தி மொழியையும், 38.96% வீதமானோர் குருக் மொழியையும், 13.87% வீதமானோர் உருது மொழியையும், 0.63% வீதமானோர் முண்டாரி மொழியையும் முதன்மை மொழியாக கொண்டிருக்கின்றனர்.[4]

கல்வியும் சுகாதார சேவைகளும்தொகு

மாவட்டத்தில் 318 தொடக்கப்பள்ளிகள், 68 நடுநிலைப்பள்ளிகள், 20 உயர்நிலைப்பள்ளிகள், 2 உயர்நிலை பள்ளிகள் மற்றும் இரண்டு பட்டப்படிப்பு கல்லூரிகள் மற்றும் மாணவிகளுக்கான ஒரு பட்டப்படிப்பு கல்லூரி உள்ளன. இந்த மாவட்டத்தில், ஒரு மாவட்ட மருத்துவமனை, ஒரு பரிந்துரை மருத்துவமனை, ஐந்து ஆரம்ப சுகாதார துணை மையங்கள், பத்து கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், எழுபத்து மூன்று சுகாதார துணை மையங்கள் உள்ளன.

உட்பிரிவுகள்தொகு

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு லோஹர்தகா தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் லோஹர்தகா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோஹர்தக்கா_மாவட்டம்&oldid=3256940" இருந்து மீள்விக்கப்பட்டது