பிரகாசம் மாவட்டம்
பிரகாசம், (தெலுங்கு: ప్రకాశం) இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் 26 மாவட்டங்களில் ஒன்று. ஒங்கோல் இதன் தலைநகரம் ஆகும். இம்மாநிலம் 14,323 சதுர கி.மீ பரப்பளவுடையது. 2011 இல் 22,88,026 பேர் இம்மாநிலத்தில் வசித்தனர். குண்டூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம் மற்றும் கர்னூல் மாவட்டம் ஆகிய மாவட்டப் பகுதிகளைக் கொண்டு பெப்ரவரி 2, 1970 இல் இம்மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தலைவரான த. பிரகாசம் என்பவரது நினைவாகவே இம்மாநிலத்தின் பெயர் சூட்டப்பட்டது.
பிரகாசம்
ప్రకాశం (தெலுங்கு) | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | கடற்கரை ஆந்திரா |
நிறுவப்பட்டது | 2 பெப்பிரவரி 1970 |
மறுசீரமைக்கப்பட்டது | 4 ஏப்பிரல் 2022 |
பெயர்ச்சூட்டு | தங்குதரி பிரகாசம் |
தலைமையிடம் | ஒங்கோல் |
மண்டலங்கள் | 38 |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. ஏ எஸ் தினேஷ் குமார், இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திருமதி. மல்லிகா கர்க், இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,323 km2 (5,530 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,88,026 |
• அடர்த்தி | 160/km2 (410/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
இணையதளம் | prakasam |
மாவட்டம் பிரிப்பு
தொகுஇம்மாவட்டத்தின் சில வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிய பாபட்லா மாவட்டம் நிறுவப்பட்டது.[3][4]
ஆட்சிப் பிரிவுகள்
தொகு- வருவாய்க் கோட்டங்கள் (3): ஒங்கோல், கனிகிரி மார்காபுரம்.
- மாநகராட்சிகள் (1): ஒங்கோல்
- நகராட்சிகள் (1): மார்க்கப்பூர்
- பேரூராட்சி (5): சிமகுர்த்தி, கித்தலூர், போடிலி, தர்சி மற்றும் கனிகிரி
- ஊராட்சிகள்:716
இந்த மாவட்டத்தை 38 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5]
அரசியல்
தொகுஇம்மாவட்டம் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதி, பாபட்ல மக்களவைத் தொகுதி மற்றும் 8 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.[6]
தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | தொகுதி எண் | தொகுதி பழைய எண் | மக்களவை தொகுதிகள் | ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|---|---|
102 | 221 | எர்ரகொண்டபாலம் சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | 16 | 33 | ஒங்கோல் மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
103 | 222 | தர்சி சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | ||||
107 | 226 | சந்தனூதலபாடு சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | 15 | 32 | பாபட்ல மக்களவைத் தொகுதி | பட்டியல் சாதி |
108 | 227 | ஒங்கோலு சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | 16 | 33 | ஒங்கோல் மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
110 | 229 | கொண்டபி சட்டமன்றத் தொகுதி | பட்டியல் சாதி | ||||
111 | 230 | மார்க்காபுரம் சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | ||||
112 | 231 | கித்தலூர் சட்டமன்றத் தொகுதி | |||||
113 | 232 | கனிகிரி சட்டமன்றத் தொகுதி |
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புக்கள்
தொகு
மேற்கோள்கள்
தொகு- ↑ https://prakasam.ap.gov.in/collectors-profile/
- ↑ 2.0 2.1 https://prakasam.ap.gov.in/economy-2/
- ↑ With creation of 13 new districts, AP now has 26 districts
- ↑ ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்
- ↑ "New AP Map: Check Out Biggest and Smallest Districts in Andhra Pradesh". Sakshi Post (in ஆங்கிலம்). 2022-04-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-03.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 31.