பாலோட்

இந்தியாவின் சத்தீஸ்கரில் உள்ள நகரம்


பாலோட் (Balod), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் பாலோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது தந்துலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரம் தம்தரி நகரத்திலிருந்து 44 கிலோ மீட்டர் தொலைவிலும், துர்க் நகரத்திலிருந்து 58 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பாலோட்
நகரம்
பாலோட் is located in சத்தீசுகர்
பாலோட்
பாலோட்
பாலோட் is located in இந்தியா
பாலோட்
பாலோட்
ஆள்கூறுகள்: 20°44′N 81°12′E / 20.73°N 81.2°E / 20.73; 81.2
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்பாலோட்
ஏற்றம்
324 m (1,063 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்32,432
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி[1]
 • பிற மொழிகள்சத்திசுகரி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
491226[2]
வாகனப் பதிவுCG

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 18 வார்டுகளும், 5308 வீடுகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 23,648 ஆகும். அதில் ஆண்கள் 11,798 மற்றும் பெண்கள் 11,850 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,830 மற்றும் 2,733 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.03%, இசுலாமியர் 5.98%, பௌத்தர்கள் 0.61%, சமணர்கள் 3.95%, சீக்கியர்கள் 0.35%, கிறித்தவர்கள் 0.77% மற்றும் பிறர் 0.32% ஆகவுள்ளனர்.[3]இந்நகரத்தில் இந்தி மொழி மற்றும் சத்திசுகரி மொழி பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 18. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 21 December 2018.
  2. Balod
  3. Balod Population, Religion, Caste Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலோட்&oldid=3711239" இலிருந்து மீள்விக்கப்பட்டது