பலராம்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்

உத்தரப் பிரதேசத்திலும் பலராம்பூர் மாவட்டம் என்றொரு மாவட்டம் உள்ளது!

பலராம்பூர் மாவட்டம் (Balrampur district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். சர்குஜா கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் பலராம்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. சர்குஜா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் 1 சனவரி 2012-இல் துவக்கப்பட்டது.[1]

பலராம்பூர் மாவட்டம்
बलरामपुर जिला
பலராம்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மாவட்டம்
தலைமையகம்பலராம்பூர்
பரப்பு3,806.08 km2 (1,469.54 sq mi)
மக்கட்தொகை5,98,855 (2001)
மக்கள்தொகை அடர்த்தி157/km2 (410/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை2
படிப்பறிவு54.24%
பாலின விகிதம்1000:970
வட்டங்கள்6
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்1
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இம்மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

இம்மாவட்டத் தலைமையிட நகரமாக பலராம்பூர், சர்குஜா மாவட்டத்தின் வடக்கில் எண்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் மலைக்காடுகளுடன் கூடியது. இம்மாவட்டத்தின் இராமானுஜகஞ்ச் பகுதி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியும், மாவட்டத்தின் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமும் ஆகும். இந்நகரம் சத்தீஸ்கர்-ஜார்கண்ட் மாநிலங்களின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதிகள் தொகு

தொடருந்துகள் தொகு

அருகில் உள்ள தொடருந்து நிலையம் கார்வா [2] மற்றும் அம்பிகா தொடருந்து நிலையம் ஆகும்[3]

வானூர்தி நிலையம் தொகு

அருகில் உள்ள வானூர்தி நிலையம் ராஞ்சி மற்றும் ராய்ப்பூர் ஆகும்.

சாலைகள் தொகு

தேசிய நெடுஞ்சாலை 343 (இந்தியா) இம்மாவட்டத்தின் வழியாக செல்வதால், பேருந்துகள் மற்றும் சரக்கூந்துகள் மாநிலத்தின் அனைத்து நகரங்களுடன் பலராம்பூர் மாவட்டத்தை இணைக்கிறது.

கல்வி தொகு

பலராம்பூர் மாவட்டத்தில் ஒரு கல்லூரி உள்ளது. சர்குஜா பல்கலைக் கழகம் 2 செப்டம்பர் 2008-இல் நிறுவப்பட்டது.

மாவட்ட நிர்வாகம் தொகு

3806.08 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 645 கிராமங்களும், 340 கிராமப் பஞ்சாயத்துகளும், ஐந்து நகரப் பஞ்சாயத்துக்களும் மற்றும் பலராம்பூர், இராஜ்பூர், சங்கர்கர், குஷ்மி, இராமச்சந்திராபுரம் மற்றும் வத்ராப்நகர் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களும், ஆறு வருவாய் வட்டங்களையும், நான்கு உட்கோட்டங்களையும் கொண்டுள்ளது.[4][5]

மக்கள் வகைப்பாடு தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மொத்த மக்கள்தொகை 5,98,855 ஆகும். அதில் ஆண்கள் 3,04,367 ஆகவும்,பெண்கள் 2,94,488 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் முரியா, மரியா மற்றும் ஹல்பா பழங்குடி மக்கள் 81.38 சதவீதமாக உள்ளனர். பட்டியல் சமூக மக்கள் 4.01 சதவீதமாக உள்ளனர். மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 157 வீதம் வாழ்கின்றனர். மாவட்ட மொத்த படிப்பறிவு 54.24%ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு விகிதம் 67.27 % ஆகவும்; பெண்களின் படிப்பறிவு 51.79 % ஆக உள்ளது.

பொருளாதாரம் தொகு

பலராம்பூர் மாவட்டம் வளமையான மண் வளம் கொண்டதால் நெல் மற்றும் கோதுமை அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

அரசியல் தொகு

சர்குஜா மக்களவை தொகுதியில் பலராம்பூர் மாவட்டம் உள்ளது. பலராம்பூர் மாவட்டத்தின் பிரதாப்பூர் சட்டமன்ற தொகுதி, இராமானுஜகஞ்ச் சட்டமன்ற தொகுதி மற்றும் சம்ரி சட்டமன்ற தொகுதிகள் மூன்றும் பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. ஒன்பது புதிய மாவட்டங்களுடன் சத்தீஸ்கர் மாநிலத்தின் வரைபடம்
  2. http://indiarailinfo.com/arrivals/garhwa-road-junction-ghd/1117
  3. http://indiarailinfo.com/search/ambikapur-abkp-to-anuppur-apr/3084/0/521.
  4. "Balrampur district Profile, Chhattisgarh". Balrampur district. Chhattisgarh State Government. Archived from the original on 6 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 Nov 2013.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-26.

வெளி இணப்புகள் தொகு