பலோடா பஜார் மாவட்டம்
பலோடா பஜார் மாவட்டம் (Baloda Bazar district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். ராய்ப்பூர் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் பலோடா பஜார் ஆகும்.[1][2][3]
இம்மாவட்டம் ராய்ப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளை கொண்டு உருவாக்கப்பட்டது. மாநிலத் தலைநகரம் ராய்ப்பூரிலிருந்து வடகிழக்கே எண்பத்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் பலோடா பஜார் நகரம் அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
தொகுஇம்மாவட்டம் பலோடா பஜார் உட்கோட்டம், பாட்டபார உட்கோட்டம், பிலாய்கர் உட்கோட்டம் என மூன்று உட்கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. உட்கோட்டங்கள் பலாரி, பலோடா பஜார், கஸ்டோல், பிலாய்கர், பாட்டபாரா மற்றும் சிக்மா என ஆறு வருவாய் வட்டங்களை கொண்டது.
மாவட்ட எல்லைகள்
தொகுபலோடா பஜார் மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கில் பிலாஸ்பூர் மாவட்டம், கிழக்கில் ராய்கர் மாவட்டம் மற்றும் மகாசமுந்து மாவட்டம், தெற்கில் ராய்ப்பூர் மாவட்டம் மற்றும் துர்க் மாவட்டம், மேற்கில் பெமேதரா மாவட்டம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "About District | District Balodabazar - Bhatapara | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
- ↑ "History | District Balodabazar - Bhatapara | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
- ↑ "Table C-01 Population by Religion: Chhattisgarh". censusindia.gov.in. Registrar General and Census Commissioner of India. 2011.