சத்தீசுகர் சட்டப் பேரவை

சத்தீசுகர் சட்டப் பேரவை (Chhattisgarh Legislative Assembly) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் ஓரவை முறைமை கொண்டது. இதன் தலைமையகம் ராய்ப்பூரில் அமைந்துள்ளது. சத்தீசுகர் சட்டப் பேரவை 90 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்டது. இதன் உறுப்பினர்கள் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர்களால் நேரடியா தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.[1]சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன் தற்போதைய முதலமைச்சர் பூபேஷ் பாகல்.ஆவர். 2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக 7 மற்றும் 17 நவம்பர் 2023 நாட்களில் நடைபெறுகிறது. 3 டிசம்பர் 2023 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று 13 டிசம்பர் 2023 அன்று விஷ்ணு தேவ் சாய் தலைமையில் ஆட்சி அமைத்தது.


சத்தீஸ்கர் சட்டப் பேரவை
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
தலைமை
ஆளுநர்
பிசுவபூசண் அரிச்சந்தன்
23 டிசம்பர் 2023 முதல்
சபாநாயகர்
துணை சபாநாயகர்
பிரிட்ஜ்மோகன் அக்ராவால், பாரதிய ஜனதா கட்சி
13 டிசம்பர் 2023 முதல்
துணை முதலமைச்சர்
அருண் சாவ்
விஜய் சர்மா
13 டிசம்பர் 2023 முதல்
கட்டமைப்பு
அரசியல் குழுக்கள்
அரசு (54)

எதிர்கட்சிகள் (36)

தேர்தல்கள்
நேரடித் தேர்தல்
அண்மைய தேர்தல்
7 மற்றும் 17 நவம்பர் 2023
அடுத்த தேர்தல்
2028
கூடும் இடம்
சத்தீஸ்கர் சட்டமன்ற வளாகம், ராய்ப்பூர், சத்தீஸ்கர்

வரலாறு

தொகு

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பகுதிகளைப் பிரித்து 25 ஆகஸ்டு 2000 அன்று சத்தீசுகர் மாநிலம் நிறுவப்பட்டது. 1 நவம்பர் 2000 அன்று சத்தீசுகர் சட்டப் பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது..

சட்டப் பேரவைத் தலைவர்கள்

தொகு
பதவி பெயர் படம் எந்த நாள் முதல்
அரசியலமைப்பு பதவிகள்
ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன் 23 பிப்ரவரி 2023
சபாநாயகர் ரமன் சிங்   13 டிசம்பர் 2023
துணை சபாநாயகர் பிரிட்ஜ்மோகன் அக்ராவால் 13 டிசம்பர் 2023
முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய்   13 டிசம்பர் 2023
துணை முதலமைச்சர்கள் அருண் சாவ் & விஜய் சர்மா 13 டிசம்பர் 2023
சட்டப் பேரவை எதிர்கட்சி தலைவர் டிசம்பர் 2023

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Chhattisgarh Legislative Assembly". Legislative Bodies in India website. பார்க்கப்பட்ட நாள் 9 December 2010.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகாள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசுகர்_சட்டப்_பேரவை&oldid=3909168" இலிருந்து மீள்விக்கப்பட்டது