பிசுவபூசண் அரிச்சந்தன்

பிசுவபூசண் அரிச்சந்தன் (Biswabhusan Harichandan)(பிறப்பு 3 ஆகஸ்ட் 1934)[1] ஆந்திரப் பிரதேசத்தின் 23வது மற்றும் தற்போதைய ஆளுநராகப் பணியாற்றும் இந்திய அரசியல்வாதி ஆவார்.

பிசுவபூசண் அரிச்சந்தன்
23வது ஆந்திரப் பிரதேச ஆளுஞர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 ஜூலை 2019
முதலமைச்சர்ஜெகன் மோகன் ரெட்டி
முன்னையவர்ஈ. சீ. இ. நரசிம்மன்
ஒடிசா சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1997–2009
தொகுதிபுவனேசுவரம் மத்திய சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1990–1995
தொகுதிசில்க்கா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1977–1980
தொகுதிசில்க்கா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஆகத்து 1934 (1934-08-03) (அகவை 90)
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலை
  • அரசியல்வாதி
  • வழக்கறிஞர்
  • எழுத்தாளர்
தொழில்வேந்தர்-சிறீ பி. அரிச்சந்தன் கிருஷ்ணா பல்கலைக்கழகம்
உடைமைத்திரட்டுசட்ட்ம், வருவாய், மீன்வள அமைச்சர் ஒரிசா அரசு
(2004–2009)
விருதுகள்கலிங்கா ரத்னா சமான் 2021

அரசியல் வாழ்க்கையும் பணியும்

தொகு

அரிச்சந்தன் பாரதிய ஜனசங்கத்தில் 1971-ல் சேர்ந்தார். பாரதிய ஜனசங்கத்தில் தேசிய செயல் உறுப்பினர் மற்றும் ஒரிசா மாநில பொதுச்செயலாளராக ஜனதா கட்சி 1977-ல் தோன்றும் வரை பொறுப்பு வகித்தார்.[2] நெருக்கடி நிலைக் காலத்தில் இவர், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் 1980-ல் பாரதிய ஜனதா கட்சி உருவான பிறகு , இவர் ஜனதா தளத்துடன் கைகோர்ப்பதற்கு முன்பு 1988 வரை மாநிலத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1996-ல் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

அரிசந்தன் ஒடிசா மாநில சட்டப் பேரவைக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். சில்க்கா ஏரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1977ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் 1990-ல் ஜனதா தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஆட்சிக்கு வந்தார். 1997ஆம் ஆண்டு புவனேசுவரம் மத்திய தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தொடர்ந்து மூன்று முறை இதே தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியில் தொடர்ந்தார். 2004-ல் பிஜுஜனதா தளம்-பாஜக தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருந்தார்.

ஜூலை 2019-ல், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆந்திரா மற்றும் தெலங்காணா ஆளுநர்களை மாற்றியமைத்தார். அரிச்சந்திரன் ஆந்திராவின் 23வது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

17 நவம்பர் 2021 அன்று, அரிசந்தனுக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது.[4]

விருதுகள்

தொகு

அரிசந்தன் 2021-ல் கலிங்க ரத்னா விருது பெற்றார்.[5]

பனுவல்கள்

தொகு

அரிசந்தன் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் சில: மருபதாசு, மகாசங்கராமர் மகாநாயக், பக்சி ஜகபந்து , பைகா கலகம் மற்றும் இவரது சுயசரிதை சங்கர்சா சரினாகின்.

மேற்கோள்கள்

தொகு
  1. "BJP veteran Harichandan named Andhra governor". 17 July 2019. https://timesofindia.indiatimes.com/city/vijayawada/bjp-veteran-harichandan-named-andhra-governor/articleshow/70251551.cms. 
  2. "Veteran BJP leader Biswa Bhusan Harichandan appointed as Governor of Andhra Pradesh". The News Minute. 16 July 2019. பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.
  3. "Orissa Assembly Election Results in 1977". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 July 2019.
  4. "Andhra Pradesh governor Harichandan diagnosed with Covid-19, rushed to hospital". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-11-17. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
  5. Reporter, Staff (2021-04-02). "Kalinga Ratna award presented to Governor" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/kalinga-ratna-award-presented-to-governor/article34226673.ece. 
அரசியல் பதவிகள்
முன்னர் ஆந்திரப் பிரதேச ஆளுநர்
24 ஜூலை 2019 – முதல்
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுவபூசண்_அரிச்சந்தன்&oldid=3926469" இலிருந்து மீள்விக்கப்பட்டது