எசு. அப்துல் நசீர்
நீதிபதி சை. அப்துல் நசீர் (Syed Abdul Nazeer; பிறப்பு: சனவரி 5, 1958, மூதபித்ரிக்கு அருகிலுள்ள பெலுவாயில்[1][2]) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தின் தற்போதைய ஆளுநர் ஆவார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். இவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார்.
சையது அப்துல் நசீர் | |
---|---|
![]() | |
24வது ஆந்திரப் பிரதேச ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 24 பெப்ரவரி 2023 | |
நியமித்தவர் | திரௌபதி முர்மு |
முதலமைச்சர் | ஜெகன் மோகன் ரெட்டி |
முன்னவர் | பிசுவபூசண் அரிச்சந்தன் |
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 17 பெப்ரவரி 2017 – 4 சனவரி 2023 | |
முன்மொழிந்தவர் | சகதீசு சிங் கேகர் |
நியமித்தவர் | பிரணப் முகர்ஜி |
கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி | |
பதவியில் 12 மே 2003 – 16 பெப்ரவரி 2017 | |
முன்மொழிந்தவர் | வி. நா. கரே |
நியமித்தவர் | ஆ. ப. ஜை. அப்துல் கலாம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 5 சனவரி 1958 பெலுவை, மைசூர் மாநிலம், இந்தியா |
இருப்பிடம் | ஆளுநர் இல்லம், விசயவாடா |
வாழ்க்கை & கல்வி தொகு
அப்துல் நசீர் கர்நாடகாவின் கடலோர கர்நாடகாவின் கனரா பகுதியைச் சேர்ந்த ஒரு முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பகிர் சாஹேபின் ஆவார். இவருக்கு ஐந்து உடன்பிறப்புகள் உள்ளனர்.[1] இவர் பெலுவாய் மற்றும் மூதபித்ரியில் வளர்ந்தார். மூதபித்ரி மகாவீர கல்லூரியில் இளநிலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் மங்களூருவில் உள்ள கோடியல்பைலில் உள்ள எசு. டி. எம். சட்டக் கல்லூரியில் (முன்னர் " ஸ்ரீ தர்மசாதலா மஞ்சுநாதேசுவரா சட்டக் கல்லூரி" என்று அறியப்பட்டது) சட்டப் பட்டம் பெற்றார்[2][1]
நீதிபதியாக தொகு
சட்டப் பட்டம் பெற்ற பிறகு, நசீர் 1983-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்து பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். மே 2003-ல், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நசீர் நியமிக்கப்பட்டார்.[3] பின்னர் இதே உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2017-ல், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணியாற்றியபோது, நசீர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக இல்லாமல், இப்பதவிக்கு நேரடியாகப் பதவி உயர்வு பெற்ற மூன்றாவது நீதிபதி இவராவார்.[4]
உச்சநீதிமன்ற நீதிபதியாக தொகு
2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற நசீர், 2017ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய முத்தலாக் வழக்கினை விசாரித்த ஒரே இசுலாமிய நீதிபதியாக அப்துல் நசீர் இருந்தார்.[5][6] இசுலாமியச் சட்ட முறைமையின் கீழ் முத்தலாக் (தலாக்-இ-பித்தாத்) நடைமுறைக்குச் செல்லுபடியாகும் என்பதை நீதிபதி நசீரும் மற்ற ஒரு நீதிபதியும் உறுதி செய்த போதிலும், 3:2 பெரும்பான்மையால் இருக்கையால் தடைசெய்யப்பட்டது. இசுலாமிய சமூகத்தில் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான சட்டத்தை 6 மாதங்களில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருந்தது.[7][8] முத்தலாக் தொடர்பாக அரசு சட்டம் இயற்றும் வரை, கணவர்கள் மனைவிக்கு முத்தலாக் கூறுவதற்குத் தடை விதிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது.[9][10]
அயோத்தி சிக்கலுக்கு 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் 5 நீதிபதிகள் அமர்வில் இவரும் ஒருவர் ஆவார். இதில் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வக அறிக்கையை உறுதிப்படுத்தினார். இதில் சர்ச்சைக்குரிய பகுதியில் ஒரு இந்து அமைப்பு உள்ளது. இவர் இராமர் கோயிலுக்கு ஆதரவாகத் தீர்ப்பை வழங்கினார். இதனால் பல ஆண்டுகளாக நீடித்த தகராறு 5-0 தீர்ப்புடன் முடிவுக்கு வந்தது.[11]
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 "Mangalorean Justice Abdul Nazeer among the 5 new judges of Supreme Court". http://www.mangaloretoday.com/main/Mangalorean-Justice-Abdul-Nazeer-among-the-5-new-judges-of-Supreme-Court.html.
- ↑ 2.0 2.1 "Moodbidri based Justice S Abdul Nazeer becomes Supreme Court judge | Udayavani - ಉದಯವಾಣಿ". http://www.udayavani.com/english/news/mangaluru/196845/moodbidri-based-justice-s-abdul-nazeer-becomes-supreme-court-judge.
- ↑ "Hon'ble Mr. Justice S.Abdul Nazeer". http://karnatakajudiciary.kar.nic.in/bio_data/former_judges/sanj.htm.
- ↑ "HC judge elevated to Supreme court". 2017-02-17. http://www.newindianexpress.com/cities/bengaluru/2017/feb/17/hc-judge-elevated-to-supreme-court-1571518.html. பார்த்த நாள்: 2017-03-16.
- ↑ "Triple talaq case: Muslim judge on multi-faith bench kept mum all through". http://timesofindia.indiatimes.com/india/triple-talaq-case-muslim-judge-on-multi-faith-bench-kept-mum-all-through/articleshow/58741926.cms.
- ↑ "5 Judges Of 5 Faiths Give Verdict On Triple Talaq". http://www.ndtv.com/india-news/5-supreme-court-judges-of-5-faiths-to-give-verdict-on-triple-talaq-1740329.
- ↑ "Supreme Court declares triple talaq unconstitutional, strikes it down by 3:2 majority". http://timesofindia.indiatimes.com/india/supreme-court-bars-triple-talaq-for-6-months-until-parliament-legislates-on-issue/articleshow/60170130.cms.
- ↑ "Five Supreme Court judges who passed the verdict on triple talaq". http://www.hindustantimes.com/india-news/five-supreme-court-judges-who-will-pass-verdict-on-triple-talaq-issue/story-owThP7w19lxkMPh32aCwDP.html.
- ↑ "Injunction on husbands pronouncing triple talaq until law is made: SC advocate". http://www.business-standard.com/article/news-ani/injunction-on-husbands-pronouncing-triple-talaq-until-law-is-made-sc-advocate-117082200380_1.html.
- ↑ "This Is What Supreme Court Said In Triple Talaq Judgment [Read Judgment"]. http://www.livelaw.in/supreme-court-said-triple-talaq-judgment-read-judgment/.
- ↑ "SC verdict refers to ASI report on ‘Hindu structure’ at Ayodhya site — this is what it says". https://www.google.com/s/theprint.in/india/sc-verdict-refers-to-asi-report-on-hindu-structure-at-ayodhya-site-this-is-what-it-says/318486/%3famp.