ஆளுநர் இல்லம், விசயவாடா
ஆளுநர் இல்லம் விசயவாடா (Raj Bhavan, Vijayawada) என்பது ஆந்திரப் பிரதேச ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும்.[1] இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் விசயவாடாவில் அமைந்துள்ளது.
Raj Bhavan | |
---|---|
రాజ్ భవన్ | |
பொதுவான தகவல்கள் | |
நகரம் | விசயவாடா |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 16°30′30″N 80°37′50″E / 16.5084°N 80.6305°E |
உரிமையாளர் | ஆந்திரப் பிரதேச அரசு |
வலைதளம் | |
Raj Bhavan, Vijayawada, Andhra Pradesh |
வரலாறு
தொகு2014-ல் தெலங்காணா மாநிலம் உருவான பிறகு, ஈ. சீ. இ. நரசிம்மன் 2019 வரை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் இணை ஆளுநராகப் பணியாற்றினார். பின்னர், ஆந்திரப் பிரதேசத்தின் 23வது ஆளுநராக பிசுவபூசண் அரிசந்தன் நியமிக்கப்பட்டார். அப்போது, ஆளுநர் வசிக்கத் தனி இல்லம் தேவைப்பட்டது. எனவே நா. சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசு, 2019-ல் அரசு நீர்ப்பாசன இல்லத்தை ஆளுநர் இல்லமாக மாற்றியது [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Veteran BJP leader Biswa Bhusan Harichandan appointed as Governor of Andhra Pradesh". The News Minute (in ஆங்கிலம்). 2019-07-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.
- ↑ Syed Akbar (Jul 21, 2019). "Irrigation 'powerhouse' to be temporary Raj Bhavan | Vijayawada News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-13.