பிஜு ஜனதா தளம்

இந்திய அரசியல் கட்சி

பிஜு ஜனதா தளம்(Biju Janata Dal,BJD, ஒடியா: ବିଜୁ ଜନତା ଦଳ) ஒரிசா மாநில அரசியல் கட்சியாகும். பாரதிய ஜனதா கட்சியுடன் ஜனதா தளம் கூட்டணி வைக்காததை முன்னிட்டு 1997இல் நவின் பட்நாயக் பிஜு ஜனதா தளத்தை தொடங்கினார்.[1][2] இதன் தேர்தல் சின்னம் சங்கு ஆகும். 2000 மற்றும் 2004 ல் ஒரிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி வைத்து பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2009, 2014, 2019ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து பிரிந்து தனியாகவே பெரும்பான்மை பெற்றது. நவின் பட்நாயக் நான்காவது முறையாக தொடர்ந்து ஒரிசாவின் முதல்வராக இருந்து வருகிறார்.

பிஜூ ஜனதா தளம்
ବିଜୁ ଜନତା ଦଳ
தலைவர்நவீன் பட்நாய்க்
நாடாளுமன்ற குழுத்தலைவர்நவீன் பட்நாய்க்
மக்களவைத் தலைவர்அருச்சுன் சரண் சேத்தி
தொடக்கம்26 திசம்பர் 1997; 26 ஆண்டுகள் முன்னர் (1997-12-26)
தலைமையகம்6R/3,யூனிட்-6, பாரஸ்ட் பார்க், புவனேசுவர்
மாணவர் அமைப்புபிஜேடி மாணவர் சங்கம்
இளைஞர் அமைப்புபிஜூ யுபா சஷாக்திகரண் யோசனா
பெண்கள் அமைப்புமமதா யோசனா
தொழிலாளர் அமைப்புபிஜூ கிருசக் யோசனா (BKVY)
பிஜூ கிருசக் கல்யாண் யோசனா (BKKY)
கொள்கைபரவல் அரசியல்
சமூக தாராளமயம்
குமுகாய மக்களாட்சி
அரசியல் நிலைப்பாடுநடுவண்-இடது
நிறங்கள்கரும்பச்சை  
கூட்டணிதே.ச.கூ (1998–2009)
மூன்றாம் கூட்டணி (2009)
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
0 / 545
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
9 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
51 / 147
தேர்தல் சின்னம்
இணையதளம்
www.bjdodisha.org.in
இந்தியா அரசியல்

மேற்சான்றுகள்

தொகு
  1. Mishra, Sandeep (2012). "Naveen's BJD still going strong 15 years on - The Times of India". indiatimes.com. Archived from the original on 2014-01-07. பார்க்கப்பட்ட நாள் 24 January 2013. Fifteen years back on December 26 when the Biju Janata Dal as a new political party was born in Odisha
  2. "BJD Celebrates its 14th Foundation Day | Odisha News | A Complete Information Portal on Odisha". odisha.360.batoi.com. 2011. பார்க்கப்பட்ட நாள் 24 January 2013. The BJD was formed on December 26, 1997
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஜு_ஜனதா_தளம்&oldid=3995768" இலிருந்து மீள்விக்கப்பட்டது