முதன்மை பட்டியைத் திறக்கவும்

பூபேஷ் பாகல் (Bhupesh Baghel (பிறப்பு: ஆகஸ்டு 23, 1961) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தற்போதைய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியினை விட இந்திய தேசிய காங்கிரசு கட்சி பெரும்பானமையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. சத்தீசுகர் மாநில காங்கிரசு குழுவின் தலைவராக அக்டோபர், 2014 முதல் இருந்து வருகிறார்.[2][3] இவர் துர்க் மாவட்டம் பதான் சட்டசபைத் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.[4][5]

பூபேஷ் பாகல்
Bhupesh Baghel, June 2018.jpg
3 ஆவது சத்தீசுகர் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
டிசம்பர் 17 2018
ஆளுநர் ஆனந்திபென் படேல்
முன்னவர் ராமன் சிங்
பதான் சட்டமனறத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர், 2014
முன்னவர் விஜய் பாகல்
தொகுதி பதான் சட்டமனறத் தொகுதி
பதவியில்
1993 – 2008
பின்வந்தவர் விஜய் பகல்
தனிநபர் தகவல்
பிறப்பு 23 ஆகத்து 1961 (1961-08-23) (அகவை 58)
துர்க் மாவட்டம், சத்தீசுகர், இந்தியா
அரசியல் கட்சி Hand INC.svg இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) முதேஷ்வர் பகல்
பிள்ளைகள் 4
இருப்பிடம் மன்சோரவர் அவாசிய பரிசர், பிலாய், சத்தீசுகர்
பணி அரசியல்வாதி

பிண்ணனிதொகு

பூபேஷ் பகல் ஆகத்து 23, 1961 இல் வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குர்மி மக்கள் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்[6][7]. இவரின் தந்தை நந்தகுமார் தாய் பிந்தேஷ்வர் பகல் ஆவர். இவர் முக்தேஷ்வரி பகல் என்பவரைத் திருமணம் செய்தார். இவருக்கு மரு. நரேந்திர தேவ் வர்மா எனும் மகள் உள்லார். இவர் இந்தி எழுத்தாளர் ஆவார்.[8]

அரசியல் வாழ்க்கைதொகு

பூபேஷ் பகல் 1980 ஆம் ஆண்டில் தனது அரசியல் குரு சண்டலால் சந்திரக்கரின் வழிகாட்டுதலின் கீழ் தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். 1985 ஆம் ஆண்டில் இந்திய இளைஞர் காங்கிரசின் உறுப்பினராகச் சேர்ந்தார்[9]. 1990 முதல் 1994 ஆம் ஆண்டு வரை துர்க் மாவட்ட தலைவராக இருந்தார்.[10] பின் 1994 முதல் 1995 வரை மத்தியப் பிரதேச இளைஞர் காங்கிரசின் உதவித் தலைவராக இருந்தார்.

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூபேஷ்_பாகல்&oldid=2732534" இருந்து மீள்விக்கப்பட்டது