முதன்மை பட்டியைத் திறக்கவும்

கொண்டகவான் மாவட்டம் (Kondagaon district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். பஸ்தர் கோட்டத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.

இம்மாவட்டம் 01 சனவரி 2012-இல் பஸ்தர் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்தெடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தின் 27-வது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. [1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கொண்டகவான் நகரம் ஆகும்.

பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக கொண்ட இந்திய மாவட்டங்களில் கொண்டகவான் மாவட்டமும் ஒன்றாகும்.[2]

மாவட்ட எல்லைகள்தொகு

368 783 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கொண்டகவான் மாவட்டம், வடக்கில் காங்கேர் மாவட்டம் மற்றும் தம்தரி மாவட்டம், கிழக்கில் பஸ்தர் மாவட்டம், மற்றும் தந்தேவாடா மாவட்டம், தென்மேற்கில் நாராயண்பூர் மாவட்டம் எல்லைகளாக கொண்டது.

புவியியல்தொகு

இம்மாவட்டம் மலைகளும் காடுகளுடன் கூடியது.

போக்குவரத்துதொகு

கொண்டகவான் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை எண் 30-இல் அமைந்திருப்பதால், ராய்ப்பூர், ஜெகதல்பூர் நகரங்களுடன் பேருந்து சேவைகள் உள்ளது.

அருகில் உள்ள தொடருந்து நிலையம் 73 கி. மீ. தொலைவில் உள்ள ஜெகதல்பூர் நகரம் ஆகும். [3]

பொருளாதாரம்தொகு

வெண்கலத்தால் செய்யப்படும் சிற்பங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் இம்மாவட்டம் சிறப்பிடம் வகிக்கிறது. தென்னைத் தோட்டங்கள், மர அறுவை ஆலகள் அதிகம் கொண்டது. இந்தியத் துணை கண்டத்தில் பெரிய வனக் கோட்டம் கொண்ட பெருமை கொண்டகவான் மாவட்டத்திற்கு உண்டு.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டகவான்_மாவட்டம்&oldid=2046406" இருந்து மீள்விக்கப்பட்டது