பள்ளத்தாக்கு

நிலவியலில், பள்ளத்தாக்கு என்பது, பெரும்பாலும் ஒரு திசையில் அமைந்திருக்கும் தாழ்ந்த நிலப் பகுதியாகும். பள்ளத்தாக்குகளின் வடிவத்தை விளக்குவதற்கு, U-வடிவம், V-வடிவம் போன்ற புவியியற் சொற்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. பெரும்பாலான பள்ளத்தாக்குகள் U-வடிவமாகவோ, V-வடிவமாகவோ அல்லது இரண்டும் கலந்த வடிவம் கொண்டவையாகவோ இருக்கின்றன. குறைந்தது, பள்ளத்தாக்கின் இரு புறங்களிலும் அமைந்திருக்கும் குன்றுகளின் சரிவுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம் மேற்படி வடிவங்களைக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய அமெரிக்கா, மொன்டானாவில் பனியாற்றுத் தேசியப் பூங்காவில் காணப்படும் U-வடிவப் பள்ளத்தாக்கு.

ஆற்றுப் பள்ளத்தாக்கு தொகு

நீர் ஓடுவதால் உருவாகும் பள்ளத்தாக்குகள் அல்லது ஆற்றுப் பள்ளத்தாக்குகள் பொதுவாக V-வடிவம் கொண்டவை. இத்தகைய பள்ளத்தாக்குகளின் சரியான வடிவம் அதனூடாகச் செல்லும் நீரோட்டத்தின் தன்மையைப் பொறுத்து இருக்கும். மலைத் தொடர்களில் இருப்பதைப் போன்ற சரிவு கூடிய ஆறுகள் சரிவு கூடிய சுவர்களையும் ஒடுங்கிய அடிப்பகுதியையும் கொண்டனவாகக் காணப்படுகின்றன. குறைவான சரிவுடன் கூடிய ஆறுகள் அகன்ற பள்ளத்தாக்குகளை உருவாக்குகின்றன. ஆனால், ஆற்றின் கீழ்ப் பகுதிகளில் வண்டல் படிவுகள் ஏற்படத் தொடங்குவதால் இப்பகுதிகள் வெள்ளப்பெருக்குச் சமவெளிகள் ஆகின்றன.

முக்கிய பள்ளத்தாக்குகள் தொகு

 
பிரைசு ஆற்றுப் பள்ளத்தாக்கு
 
"நரக வாயில்" பள்ளத்தாக்கு, பிரித்தானிய கொலம்பியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளத்தாக்கு&oldid=3530718" இலிருந்து மீள்விக்கப்பட்டது