சாவுப் பள்ளத்தாக்கு

சாவுப் பள்ளத்தாக்கு (Death Valley) என்பது கிழக்குக் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பாலைவனப் பள்ளத்தாக்கு ஆகும். மொகாவிப் பாலைவனத்துள் அமைந்துள்ள இப்பள்ளத்தாக்கே வட அமெரிக்காவிலேயே மிகத் தாழ்ந்ததும், மிக வறண்டதும், அதி வெப்பமானதுமான பகுதியாகும். சாவுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதும், 36° 15' வ 116° 49.5' மே என்னும் இட அமைவு ஆள்கூற்றைக் கொண்டதுமான "பாட்வாட்டர்" எனப்படும் வடிநிலமே வட அமெரிக்காவின் மிகத்தாழ்ந்த இடத்தின் சரியான அமைவிடம் ஆகும். இது கடல் மட்டத்துக்குக் கீழ் 282 அடிகளில் (86 மீ) அமைந்துள்ளது. 14,505 அடி (4,421 மீ) உயரம் கொண்டதும், ஐக்கிய அமெரிக்காவிலேயே உயரமானதுமான விட்னி மலை இவ்விடத்தில் இருந்து 84.6 மைல்கள் (136.2 கிமீ) தொலைவில் உள்ளது. மேற்கு அரைக்கோளத்தில் நம்பத்தக்க வகையில் அளவிட்டு அறிவிக்கப்பட்ட அதி கூடிய வெப்பநிலை இங்கேயே காணப்படுகின்றது. இது பேர்னாசு கிறீக்கில் 1913 ஆம் ஆண்டு 10 ஆம் தேதி அளவிடப்பட்ட 134°ப (56.7°ச) ஆகும். இவ்வெப்பநிலை 1922 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் தேதி லிபியாவில் உள்ள அல் அசிசியா என்னும் இடத்தில் அளவிடப்பட்டதும், உலகிலேயே மிகவும் கூடிய அளவாகப் பதிவு செய்யப்பட்டதுமான 136 °ப (57.8 °ச) ஐ விட 2°ப மட்டுமே குறைவானது.

சாவுப் பள்ளத்தாக்கு
சாவுப் பள்ளத்தாக்கின் செய்மதிப் படம்
சாவுப் பள்ளத்தாக்கு is located in California
சாவுப் பள்ளத்தாக்கு
சாவுப் பள்ளத்தாக்கு
Floor elevation282 அடி (86 m)
ஆள்கூறுகள்36°14′48″N 116°49′01″W / 36.24667°N 116.81694°W / 36.24667; -116.81694 [1]

குறிப்புகள்

தொகு
  1. Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவுப்_பள்ளத்தாக்கு&oldid=2852765" இலிருந்து மீள்விக்கப்பட்டது