சிலிக்கான் பள்ளத்தாக்கு
(சிலிக்கன் பள்ளத்தாக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிலிக்கான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்பது, ஐக்கிய அமெரிக்காவில், வட கலிபோர்னியாவில் சான் பிரான்சிசுக்கோவின் தென் பகுதியை குறிக்கும். இங்கே சிலிக்கான் சில்லு பற்றிய ஆய்வும், புதிய கண்டுபிடிப்பும் புத்தியற்றுதலும் (invention), சிலிக்கான் சில்லு உற்பத்தியும் இங்கே அதிகம் நிகழ்வதால் இப்பெயரை இப்பகுதி சிறப்புப் பெயராகப் பெற்றது. 1971ல் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் தொடரை டான் எவ்லர (Don Hoefler) என்னும் செய்தியாளர், எலெக்டிரானிக்ஸ் நியூஸ் என்னும் செய்தித்தாளில், கட்டுரைத் தொடர் ஒன்றின் தலைப்பில் முதன்முதலாகப் பயன்படுத்தினார். இன்று உயர்நுட்பம், உயர்நுட்பக்கலை என்பதைக் குறிக்க எடுத்துக்காட்டாய் விளங்குவது சிலிக்கான் பள்ளத்தாக்கு என்னும் புகழ்ப்பெயர். சிலிக்கான் பள்ளத்தாக்கு என்பது புவியியல் பெயர் அல்ல.
சிலிக்கான் பள்ளத்தாக்கு Silicon Valley | |
---|---|
மேல் இடது மூலையில் இருந்து வலப்பக்கமாக: சிலிக்கான் பள்ளத்தாக்கின் வான்வழி காட்சி; இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்; ஆப்பிள் பூங்கா, ; சான் ஒசே நகரம்; சான்டா கிளாரா மிசன்; மவுண்டன் வியூவில் நகர மண்டபம் | |
ஆள்கூறுகள்: 37°22′39″N 122°04′03″W / 37.37750°N 122.06750°W | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | கலிபோர்னியா |
பிராந்தியம் | சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி |
பெரும்பிராந்தியம் | வடக்கு கலிபோர்னியா |
நேர வலயம் | ஒசநே−8 (பசிபிக்) |
• கோடை (பசேநே) | ஒசநே−7 (ப.நே.வ) |