கரியாபந்து மாவட்டம்

சத்தீஸ்கரில் உள்ள ஒரு மாவட்டம்

கரியாபந்து மாவட்டம் (Gariaband District) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். ராய்ப்பூர் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் கரியாபந்து மாவட்டமும் ஒன்றாகும்.

Map Chhattisgarh state and districts.png
கரியாபந்துமாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ராய்ப்பூர், சத்தீஸ்கர்
தலைமையகம்கரியாபந்து
பரப்பு5,822.861 km2 (2,248.219 sq mi)
மக்களவைத்தொகுதிகள்மகாசமுந்து

இம்மாவட்டம் ராய்ப்பூர் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கரியாபந்து நகரம் ஆகும். அருகில் உள்ள நகரங்கள் மகாசமுந்து மற்றும் ராஜிம் ஆகும். கரியாபந்து நகரம், மாநிலத் தலைநகரம் ராய்ப்பூரிலிருந்து 93 கி. மீ., தொலைவில் உள்ளது.

மாவட்ட எல்லைகள்தொகு

இம்மாவட்டத்தின் வடக்கில் மகாசமுந்து மாவட்டமும், கிழக்கிலும், தெற்கிலும் ஒரிசா மாநிலமும் மற்றும் மேற்கில் தம்தரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரியாபந்து_மாவட்டம்&oldid=2091272" இருந்து மீள்விக்கப்பட்டது