அனுசுயா யுகே

அனுசுயா யுகே (பிறப்பு: ஏப்ரல் 10, 1957) பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி தற்போது சத்தீஸ்கரின் ஆளுநராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பழங்குடியின பாஜக தலைவர் ஆவார்.[2]

அனுசுயா யுகே
The Governor of Chhattisgarh, Ms. Anusuiya Uikey.jpg
சத்திஸ்கரின் ஆறாவது ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
29 ஜூலை 2019
முதலமைச்சர் பூபேஷ் பாகெல்
முன்னவர் ஆனந்திபென் படேல்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 ஏப்ரல் 1957 (1957-04-10) (அகவை 64)
சிந்த்வாரா, மத்தியப் பிரதேசம், இந்தியா
குடியுரிமை இந்தியர்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதீய ஜனதாக் கட்சி
இருப்பிடம் ராஜ்பவனம், ராய்ப்பூர்
பணி அரசியல்வாதி

அவர் 16 ஜூலை 2019 அன்று சத்தீஸ்கர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். [1]2000 ஆம் ஆண்டில் அரசு உருவானதிலிருந்து ஆளுநரின் பொறுப்பை வகித்த முதல் பழங்குடியினர் அனுசூயா யுகே ஆவார்.தற்போது, அவர் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார்.சத்திஸ்கர் முதல்வர் கமல்நாத்தை ஒன்பது தடவைகள் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களவைத் தொகுதியான சிந்த்வாராவைச் சேர்ந்தவர் அனுசுயா யுகே.

பழங்குடி பெண்ணான அனுசுயா அரசியலில் சேருவதற்கு முன்பு சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராக இருந்தார்.[3] காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி 1985 ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற உறுபினராக ஆனார்.பின்னர் அவர் 1988 இல் மாநில அமைச்சரவையில் அமைச்சரானார்.

1990 களின் முற்பகுதியில் தான் அவர் பாஜகவில் சேர்ந்தார் பழங்குடியினருக்கான மத்திய பிரதேச மாநில ஆணையத்தின் தலைவரானார். பாஜகவின் மூத்த தலைவரும் 2000 ஆம் ஆண்டில் பெண்களுக்கான தேசிய ஆணையத்தில் உறுப்பினருமானார்.

அனுசுயா யுகே 2006 முதல் 2012 வரை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[4] 2019 முதல் ​​பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

குறிப்புகள்தொகு

அரசியல் பதவிகள்
முன்னர்
{{{before}}}
சத்தீஸ்கரின் ஆளுநர்கள்
29 ஜூலை 2019 – நடப்பு
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசுயா_யுகே&oldid=2926114" இருந்து மீள்விக்கப்பட்டது