பண்டிதர் அல்லது பண்டிட் (Pandit) (சமக்கிருதம்: पण्डित; இந்தி: पंडित[1] சமகிருத இலக்கியம், குறிப்பாக வேத நூல்கள் மற்றும் தர்ம நூல்கள் மற்றும் இந்துத் தத்துவம் ஆகியவைகளில் புலமை மிக்கோரை பண்டிதர் என்று அழைப்பர். தமிழ் மொழியில் புலமை மிக்கோரை புலவர் என்றும் அழைப்பர். [2]தற்போது இந்துஸ்தானி இசை மற்றும் கலைகளில் புலமையுடைவர்களையும் பண்டிட் என்று அடைமொழியுடன் அழைக்கும் உள்ளது. [3][4]

அருங்காட்சியகத்தில் ஒரு பண்டிதரின் சிலை

பண்டிதர் என்ற அடைமொழிக்கு சமமான பாரசீக மொழிச் சொல் உஸ்தாத் ஆகும். [5] பெண்களில் புலமை மிக்கோரை விதுஷி என்றும் அழைப்பர். [6][7] [8] இருப்பினும் இத்தகைய அடைமொழிகள் தற்போது வழக்கத்தில் பயன்பாட்டில் இல்லை.[9]

சமசுகிருத மொழியில் பொதுவாக ஏதேனும் ஒரு துறையில் சிறப்புப் புலமைமிக்க கல்வியாளர்களை பண்டிதர் என அழைப்பர்.[10] பண்டிதர் எனும் சொல் பண்ட் (पण्ड्) வேர்ச் சொல்லான (அறிவை) சேகரித்தல், குவித்தல் என்பதிலிருந்து தோன்றியது.[11] பண்டிட் என்ற சொல் வேத காலம் மற்றும் பிந்தைய வேத கால நூல்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலத்தில் பண்டிதர் சொல்லின் பயன்பாடு

தொகு

நவீன காலத்தில் இந்துஸ்தானி இசை மற்றும் கலைகளில் புலமை மிக்கோரை பண்டிட் அல்லது உஸ்தாத் என்று மரியாதையுடன் அழைப்பது வழக்கமாக உள்ளது. [12] மேலும் குறிப்பிட்ட மொழியில் புலமை படைத்தவர்களை பண்டிதர் அல்லது புலவர் அல்லது வித்துவான் என அழைக்கும் வழக்கம் உள்ளது. காஷ்மீரில் கற்றிந்த ஒரு மக்கள் குழுவை காஷ்மீர பண்டிதர்கள் என்பர். இசை அல்லது கலைகளில் புலமை மிக்க பெண்களை விதுஷி அல்லது பண்டிதை என்று அடைமொழியுடன் அழைப்பர். [13][14] [15] தமிழ்நாட்டில் முடி திருத்தும் தொழில் செய்யும் சமூகத்தினர், ஆவணங்களில் தங்கள் பெயருடன் பண்டிதன் அல்லது மருத்துவர் என்ற அடைமொழி சேர்த்துக் கொள்ளும் வழக்க இருந்தது.

புகழ் பெற்ற பண்டிதர்கள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "pandit". Random House Webster's Unabridged Dictionary
  2. Timothy Lubin; Donald R. Davis Jr; Jayanth K. Krishnan (2010). Hinduism and Law: An Introduction. Cambridge University Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-49358-1.
  3. Axel Michaels; Barbara Harshav (2004). Hinduism: Past and Present. Princeton University Press. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-08952-2.
  4. Daniel Neuman (1980). The Life of Music in North India. Wayne State University Press. p. 44.
  5. Daniel Neuman (1980). The Life of Music in North India. Wayne State University Press. p. 44.
  6. "Behind the titles".
  7. https://www3.nd.edu/~adutt/Links/documents/NagandGhosh2016.pdf
  8. "Overlooked No More: Pandita Ramabai, Indian Scholar, Feminist and Educator". The New York Times. 14 November 2018. https://www.nytimes.com/2018/11/14/obituaries/pandita-ramabai-overlooked.html. 
  9. "The sitar from different angles (Pt. 2): Modern players, global experiments".
  10. Monier Monier-Williams (1872). A Sanskrit-English Dictionary. Oxford University Press. p. 527.
  11. Monier Monier-Williams (1872). A Sanskrit-English Dictionary. Oxford University Press. pp. 526–527.
  12. Jafa, Navina (April 2021). "Meet Pt. Birju Maharaj, the poet". The Hindu. https://www.thehindu.com/entertainment/dance/meet-pt-birju-maharaj-the-poet/article34218160.ece. 
  13. "Behind the titles".
  14. https://www3.nd.edu/~adutt/Links/documents/NagandGhosh2016.pdf
  15. "Overlooked No More: Pandita Ramabai, Indian Scholar, Feminist and Educator". The New York Times. 14 November 2018. https://www.nytimes.com/2018/11/14/obituaries/pandita-ramabai-overlooked.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டிதர்&oldid=3912604" இலிருந்து மீள்விக்கப்பட்டது