நடேச சாஸ்திரி
எஸ். எம். நடேச சாஸ்திரி (S. M. Natesa Sastri, 1859-1906) பன்மொழி நூலாசிரியர் ஆவார். இவர் 1859 ஆகஸ்டு மாதத்தில் மகாலிங்க ஐயர் - அகிலாண்டேசுரி தம்பதிகளுக்கு திருச்சியில் பிறந்தார். இவர் ஆங்கிலம், வடமொழி, தமிழ் மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.
நடேச சாஸ்திரி | |
---|---|
1903 க்கு முன் நடேச சாஸ்திரி | |
பிறப்பு | 1859 மனக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்[1] |
இறப்பு | 1906 திருவல்லிக்கேணி |
தொழில் | எழுத்தாளர், அரசு அலுவலர் |
மொழி | தமிழ் |
தேசியம் | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
குடியுரிமை | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
கல்வி | கலையில் இளநிலைப் பட்டம் |
கல்வி நிலையம் | சென்னைப் பல்கலைக்கழகம் |
கருப்பொருள் | நாட்டுபுறப் பாடல்கள் |
கையொப்பம் | |
இளமை வாழ்க்கையும் கல்வியும்
தொகுகும்பகோணம் கல்லூரி மற்றும் சென்னை அரசாங்க கல்லூரி ஆகியவற்றில் படித்து இளங்கலை பட்டம் பெற்றவர். 1881 -ல் இந்திய சாசன சிற்ப ஆராய்ச்சி துறையில் இணைந்தார். இங்கு இராபர்ச் சிவல் என்பருக்கு உதவியாளராக இருந்தார். இங்கு இரண்டாண்டுகள் வேலை செய்தார், 1888ல் ஊட்டி சிறையிலும், 1890ல் பத்திரப் பதிவுத் துறையிலும் வேலை செய்தார்.
மரணம்
தொகு1906, ஏப்ரல் 11 ஆம் தேதியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது போடப்பட்ட அதிர்வெடியை கேட்டு அஞ்சி ஓடிய குதிரை இவரை உதைத்து கீழே தள்ளியதனால் உயிரிழந்தார். அப்போது இவருக்கு வயது நாற்பத்தேழு.[1]
நூல்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 Chandrasekharan, G. (2008-11-13). "Chandra: My Great Grand Father Shri Pandit Natesa Sastri Avargal". Chandra. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.
- ↑ "Folklore in southern India". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.jeyamohan.in/41915#.VSnhEvmUfyI முதல் நாவல் விவாதம் ஜெயமோகன் இணையதளம்
- ↑ "Writer Jeyamohan". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.