திருவல்லிக்கேணி

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி


திருவல்லிக்கேணி (Thiruvallikkeni) சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். மெரீனா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி இது. இங்கு உள்ள பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி வைணவர்களின் 108 திவ்வியதேசங்களில் ஒன்று.[1][2][3]

திருவல்லிக்கேணி
—  புறநகர்ப் பகுதி  —
திருவல்லிக்கேணி
அமைவிடம்: திருவல்லிக்கேணி, சென்னை , இந்தியா
ஆள்கூறு 13°03′19″N 80°16′51″E / 13.0553°N 80.2807°E / 13.0553; 80.2807
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
வட்டம் திருவல்லிக்கேணி
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
மக்களவைத் தொகுதி மத்திய சென்னை
மக்களவை உறுப்பினர்

தயாநிதி மாறன்

Zone மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

திருவல்லிக்கேணி மட்டைப்பந்து ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். எம்.ஏ. சிதம்பரம் மைதானம் திருவல்லிக்கேணியில் உள்ளது.

பெயர்க்காரணம்

தொகு

திரு+அல்லி+கேணி என்பது திருவல்லிக்கேணி என்று ஆயிற்று. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர்.

சமயம்

தொகு

இந்தப் பகுதியில் சம அளவில் இந்துக்களும் இசுலாமியர்களும் உள்ளனர். தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன. மக்கள் சமய நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். சட்டசபைத் தேர்தலில் இசுலாமியர்கள் வெற்றி பெறுவது, வினாயகர் ஊர்வலத்திற்கு இசுலாமியர் நிதி வழங்குவதைக் கொண்டு இதனை அறியலாம்.

வாலாஜா மசூதி

தொகு

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்) பகுதியில் வாலாஜா சாலையில் வாலாஜா மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு வாலாஜா குடும்பத்தினரால் நவாப் அவர்களின் நினைவாக‌ கட்டப்பட்டது.

தங்கும் விடுதிகள்

தொகு

திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. "மான்சன்"(Mansion) என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலை தேடிச் சென்னைக்கு வரும் பல இளைஞர்களுக்குத் திருவல்லிக்கேணி தான் புகலிடமாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம்.

வியாபாரம்

தொகு
 
திருவல்லிக்கேணி கடைத்தெரு. 1855 ஆம் ஆண்டு ஓவியம்

திருவல்லிக்கேணி புத்தகங்களுக்கும் பெயர் பெற்றது. பல பழைய புத்தகக்கடைகள் இங்கு உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய தி.நகர் என்று அழைக்கப்படுகிறது, அச்சகங்களும் நகலகங்களும் இங்கு ஏராளம். பலவிதமான ஆடைகள் இங்கு கிடைக்கும். பல சிறிய மற்றும் பெரிய உணவுவிடுதிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் பிரியாணிக் கடைகள் அதிகம் உண்டு. மீன் விற்கும் சந்தையும், ஜாம் பஜார் என்ற காய்கறிச் சந்தையும் அருகிலேயே உள்ளன.

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு

150 வருடம் பழமைவாய்ந்த இந்து மேல்நிலை பள்ளி இங்கு தான் உள்ளது. நோபல் பரிசு வென்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் இப்பள்ளியில் (19221925) படித்தவர் ஆவார்.

நாலாயிரப் பிரபந்தத்தில் திருவல்லிக்கேணி

தொகு

நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்:

வேதத்தை வேதத்தின் சுவைப்பயனை விழுமிய முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றை குவலயத்தார் தொழுதேத்தும்
ஆதியை அமுதை என்னை ஆளுடை அப்பனை ஒப்பவரில்லா
மாதர்கள் வாழும் மாடமாமயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே.

அமைவிடம்

தொகு

அரசியல்

தொகு

திருவல்லிக்கேணி பகுதியானது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது. மேலும், இப்பகுதி, மத்திய சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்ததுமாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Muthiah, S. (2014). Madras Rediscovered. Chennai: EastWest. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84030-28-5.
  2. Narasimhan, T. E. (31 March 2012). "Chennai central". Business Standard (Chennai). http://www.business-standard.com/india/news/chennai-central/469586/. 
  3. "The benign radiance of Gitacharyan". தி இந்து. 21 May 2004 இம் மூலத்தில் இருந்து 12 September 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040912105125/http://www.hindu.com/fr/2004/05/21/stories/2004052102020600.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவல்லிக்கேணி&oldid=4126605" இலிருந்து மீள்விக்கப்பட்டது