சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் 19-ஆவது

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இதன் தொகுதி எண் 19. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தமிழகத்திலேயே சிறிய தொகுதியாக இருந்த சேப்பாக்கம் தொகுதியில் திருவல்லிக்கேணி தொகுதியின் பகுதிகளை இணைத்து, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி உருவாக்கப்பட்டது. 2006-ம் ஆண்டு வரையில் சிறிய தொகுதியாக இருந்து வந்த சேப்பாக்கம் தொகுதி, 2011-ம் ஆண்டு முதல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அருகில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதி, சேப்பாக்கம் தொகுதியுடன் இணைக்கப்பட்ட பிறகு பெரிய தொகுதிகளில் ஒன்றாக இந்த தொகுதியும் உள்ளது.

சேப்பாக்கம் தொகுதியில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், எழிலகம் அரசு கட்டிடம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம், பெரிய மசூதி ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன. இசுலாமியச் சிறுபான்மையினர் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். எழும்பூர், சென்ட்ரல் ரெயில் நிலையங்களுக்கு மையப்பகுதியாக இருக்கும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மழை காலங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவதும் வாடிக்கையாக உள்ளது.[1]

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 2,34,319. அதில் ஆண் வாக்காளர்கள்: 1,15,080 பெண் வாக்காளர்கள்: 1,19,204 மற்றும் மூன்றாம் பாலினம்: 35 ஆகும். திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கசாலி, நாம் தமிழர் கட்சி சார்பில் மு. ஜெயசிம்மராஜாவும், அமுக சார்பில் எல். இராஜேந்திரன் போட்டியிடுகின்றனர்.[2]

தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள் தொகு

சென்னை மாநகராட்சியின் வார்டு 79, 81 முதல் 93 வரை, 95 மற்றும் 111[3].

வெற்றி பெற்றவர்கள் தொகு

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
2011[4] ஜெ. அன்பழகன் திமுக 64,191 49.44 மொ. தமிமுன் அன்சாரி மமக 54,988 42.35
2016 ஜெ. அன்பழகன் திமுக 67,982 48.50 ஆ. நூர்ஜஹான் அதிமுக 53,818 38.39
2021[5] உதயநிதி ஸ்டாலின் திமுக 93,285 67.89 ஏ. வி. ஏ. கஸ்ஸாலி பாமக 23,930 17.42

2016 சட்டமன்றத் தேர்தல் தொகு

வாக்காளர் எண்ணிக்கை தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள் தொகு

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு தொகு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
3494 %

முடிவுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு