மனிதநேய மக்கள் கட்சி

(மமக இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மனிதநேய மக்கள் கட்சி தமிழ்நாடு மாநில அரசியல் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[1]

  • மக்கள் உரிமை எனும் அதிகாரப்பூர்வ இதழை இக்கட்சி வெளியிடுகிறது.
  • தற்போது இதன் தலைவராக பேரா. எம். எச். ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளராக ப. அப்துல் சமது, பொருளாளராக கோவை உமர் ஆகியோர் உள்ளனர்.[2]
மனிதநேய மக்கள் கட்சி
தலைவர்ஜவாஹிருல்லா
தொடக்கம்7 பெப்ரவரி 2009
தலைமையகம்7, வட மரைக்காயர் தெரு,மண்ணடி,சென்னை
நிறங்கள்கருப்பு மற்றும் வெள்ளை   
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
2 / 234
இணையதளம்
mmkinfo.com
இந்தியா அரசியல்

மக்களவைத் தேர்தல் 2009 தொகு

கட்சி ஆரம்பித்த 3 மாதங்களில், 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மமக 4 தொகுதியில் கூட்டணியின்றி தனித்து நின்று கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தது.

வேட்பாளர்கள் விபரம்:-

  1. மயிலாடுதுறை மக்களவை தொகுதி-ஜவாஹிருல்லாஹ்
  2. மத்திய சென்னை மக்களவை தொகுதி - செ.ஹைதர் அலி
  3. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி-சலிமுல்லாகான்
  4. பொள்ளாச்சி மக்களவை தொகுதி-உமர்.[3]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 தொகு

2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சேப்பாக்கம், இராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆம்பூரில் அஸ்லம் பாஷாவும், இராமநாதபுரத்தில் பேரா. எம். எச். ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்று இக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட
தொகுதிகள்
வென்ற
தொகுதிகள்
வைப்புத் தொகை
இழப்பு
வைப்புத் தொகை
இழக்காத,
வெற்றி பெற்ற
தொகுதிகளில்

வாக்கு சதவீதம்
போட்டியிட்ட அனைத்து
தொகுதிகளின் மொத்த

வாக்கு சதவீதம்
3 2 0 0.49 42.43 [4]

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 தொகு

  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 இல் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, 2016 மார்ச் 19 அன்று அறிவித்தார்.[5].
  • திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.[6].
  • இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட உளுந்தூர் பேட்டை தொகுதியை மீண்டும் திமுகவுக்கே கொடுத்துள்ளது. நாகை, இராமநாதபுரம், ஆம்பூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது.[7].

2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு சதவீதம்
4 0 197150 0.5 % .[8]


தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

2011 ஆம் ஆண்டு முதல் 2021 வரை சட்ட மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள்

வருடம் வெற்றி பெற்றவர் வெற்றி பெற்ற தொகுதி சின்னம்/ஆதரவு
2011 ஜவாஹிருல்லா இராமநாதபுரம் இரட்டை மெழுகுவர்த்தி
2011 அஸ்லம் பாஷா ஆம்பூர் இரட்டை மெழுகுவர்த்தி
2021 ஜவாஹிருல்லா பாபநாசம் உதயசூரியன்
2021 ப. அப்துல் சமது மணப்பாறை உதயசூரியன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 தொகு

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.[9][10]

மேற்கோள்கள் தொகு

  1. "தமுமுகவின் மனிதநேய மக்கள் கட்சி துவக்கம்". ஒன் இந்தியா. 3 பிப்ரவரி 2009. https://tamil.oneindia.com/news/2009/02/08/tn-tmmk-launches-political-party.html. பார்த்த நாள்: 3 பிப்ரவரி 2009. 
  2. "மனித நேய மக்கள் கட்சி தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு". மாலைமலர். 3 மே 2018. https://www.maalaimalar.com/News/District/2018/05/03111116/1160503/Jawahirullah-select-in-Manithaneya-makkal-katchi-leader.vpf. பார்த்த நாள்: 3 மே 2018. 
  3. [1]
  4. [2]
  5. "திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும்:அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா". தி இந்து. 19 மார்ச் 2016. http://tamil.thehindu.com/tamilnadu/திமுக-கூட்டணியில்-மமக-தேர்தலை-எதிர்கொள்ளும்-ஜவாஹிருல்லா/article8374524.ece.. பார்த்த நாள்: 19 மார்ச் 2016. 
  6. "திமுக கூட்டணியில் மமகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு". தமிழ் இந்து. 25 மார்ச் 2016. http://tamil.thehindu.com/tamilnadu/திமுக-கூட்டணியில்-மமகவுக்கு-5-தொகுதிகள்-ஒதுக்கீடு/article8396855.ece. பார்த்த நாள்: 25 மார்ச் 2016. 
  7. ""உளுந்தூர்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சி போட்டியில்லை: ஜவாஹிருல்லா அறிவிப்பு".". தட்சு தமிழ்.. 15 ஏப்ரல் 2016.. http://tamil.oneindia.com/news/tamilnadu/mmk-not-contest-ulundurpet-constituency-251345.html. பார்த்த நாள்: 15 ஏப்ரல் 2016.. 
  8. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA. 19 மே 2016. http://eciresults.nic.in/PartyWiseResultS22.htm?st=S22. பார்த்த நாள்: 19 மே 2016. 
  9. "தி.மு.க. கூட்டணி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3; மனிதநேய மக்கள் கட்சிக்கு- 2 ; ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை". தினத்தந்தி நாளிதழ். https://www.dailythanthi.com/News/State/2021/03/02072116/DMK-Alliance-Indian-Union-Muslim-League3-Talk-MDMK.vpf. பார்த்த நாள்: 2 மார்ச் 2021. 
  10. செய்திப்பிரிவு, தொகுப்பாசிரியர் (01 Mar 2021). தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: திமுக கூட்டணியில் ஐயூஎம்எல்-க்கு- 3; மமக-வுக்கு- 2 தொகுதிகள் ஒதுக்கீடு. தி ஹிந்து நாளிதழ். https://www.hindutamil.in/news/tamilnadu/639724-tn-elections-2021-dmk-shares-3-seat-with-iuml-and-2-with-mmk.html. 

இவற்றையும் பார்க்க தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதநேய_மக்கள்_கட்சி&oldid=3590748" இருந்து மீள்விக்கப்பட்டது