அஸ்லம் பாஷா
ஏ.அஸ்லம் பாஷா ஓர் தமிழக அரசியல்வாதி. ஆம்பூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் மனிதநேய மக்கள் கட்சியை சார்ந்தவர். ஆம்பூர் அருகே உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் கயூம் என்பவருக்கு மகனாக பிறந்த, அஸ்லம் பாஷா பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தமிழ், உருது மற்றும் ஆங்கிலத்தில் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். பி.ஏ(சி.எஸ்) பட்ட படிப்பு படித்தவர்.
சட்டமன்ற உறுப்பினராக
தொகுஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2011 | ஆம்பூர் | மனிதநேய மக்கள் கட்சி | 60631 | 44.01 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011" (PDF). தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி. Archived from the original (PDF) on 2013-04-02. Retrieved 2013-10-08.