ஜெ. அன்பழகன்
ஜெ. அன்பழகன் (J. Anbazhagan,10 சூன் 1958 - 10 சூன், 2020)[1] என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஜெ. அன்பழகன் | |
---|---|
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2011–2020 | |
தொகுதி | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
பதவியில் 2001–2006 | |
தொகுதி | தியாகராய நகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சூன் 1958 |
இறப்பு | 10 சூன் 2020 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 62)
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
வேலை | அரசியல்வாதி,திரைப்படத் தயாரிப்பாளர் |
அரசியல் வாழ்க்கை
தொகுஇவரது தந்தை பழக்கடை ஜெயராமன் தி.மு.க. பகுதி செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர்.[2] தந்தையைப் பின்பற்றி அன்பழகனும் பகுதி செயலாளராக பொறுப்பேற்று, தென் சென்னை மாவட்ட செயலாளர், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் என கட்சியில் உயர்ந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் பகுதியான தியாகராய நகர் தொகுதியில், 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3]
பின்னர் இக்கட்சி சார்பாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[4] இதே தொகுதியில் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[5]
இறப்பு
தொகுசூன் 2, 2020 அன்று, காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பரிசோதனை செய்ததில், இவருக்கு கொரோனாவைரசு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர மூச்சுத் திணறல் மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு 80 சதவீத பிராண வாயு, செயற்கை சுவாச (வென்டிலேட்டா்) கருவியின் உதவியுடன் வழங்கப்பட்டு வந்தது. சூன் 10, 2020 அன்று மேலும் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, சிகிச்சை பலனின்றி காலை 8.00 மணியளவில், இவரது பிறந்தநாள் அன்றே காலமானார். சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.[6]
திரைப்படத் தயாரிப்புகள்
தொகு- தயாரிப்பாளராக
- விநியோகஸ்தராக
- யாருடா மகேஷ் (2013)
மேற்கோள்கள்
தொகு- ↑ "திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்". புதிய தலைமுறை (சூன் 10, 2020)
- ↑ சென்னையில் அரசியல் செய்வது அவ்வளவு எளிதல்ல... அஞ்சா நெஞ்சராக திகழ்ந்த தீரன் ஜெ. அன்பழகன்.
- ↑ 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "அன்புச் சகோதரா அன்பழகா... இனி என்று காண்போம் உன்னை... மு.க.ஸ்டாலின் இரங்கல்".ஒன்இந்தியா தமிழ் (சூன் 10, 2020)