துர்கா
துர்கா என்பது சிபு மித்ரா இயக்கி 1985ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழித் திரைப்படமாகும்.[1] இதில் ஹேமா மாலினி முக்கிய வேடத்தில் நடிக்க, இவருடன் அசோக் குமார், பிரான், ராஜ் பப்பர், அருணா இரானி ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ராஜேஷ் கன்னா சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் சோனிக் ஓமி ஆவார்.
கதைதொகு
தினாநாத்தின் (அசோக் குமார்) ஒரே மகள் துர்கா (ஹேமா மாலினி). இவள் மென்மையான பேசும் பெண். இவள் வாழ்க்கையில் பல்வேறு ஆண்களால் துன்புறுத்தப்படுகிறாள். முதலில் துர்கா, சுனில் நாராயணனை (ராஜ் பப்பர்) காதலிக்கிறார். பின்னர் அவரை மணந்து கொள்கிறார். ஆனால் அவளது கணவன் தன்னுடன் உறங்குவதற்கு ஒரு சாக்குப்போக்காக மட்டுமே தன்னை மணந்தான் என்பதைத் திருமணத்திற்குப் பிறகு துர்க்கா உணர்கிறாள். துர்காவின் கணவன் மற்ற பெண்களுடன் காதல் செய்வதைப் துர்க்கா பார்க்கிறாள். இதனையறிந்த துர்காவின் கணவன், துர்காவினை விபச்சாரி என்று குற்றம் சாட்டி, திட்டம் ஒன்றைத் தீட்டி அவளைச் சதியில் சிக்க வைக்ககின்றார். அப்பாவிப் பெண்ணைக் கொன்றதாகக் துர்க்கா குற்றம் சாட்டப்படுகிறாள். தன்மீது சுமத்தப்பட் அநீதியை எதிர்த்துப் போராடுவதற்காக நீதிமன்றச் செலவுகளை ஏற்கப் பெரியவரான இரக்கமுள்ள ஜெகநாத்தின் (பிரான்) உதவியை நாடுகிறாள் துர்க்கா. பல்வேறு வழக்குகளில் வெற்றிபெற்ற வழக்கறிஞர் மோகன் (ராஜேஷ் கண்ணா) என்பவரை துர்காவிற்கு அறிமுகம் செய்து வைக்கின்றார் ஜெகநாதன். ஆனால் துர்காவுக்கு அந்த முதியவரின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. அந்த முதியவர் ஏன் மோகனை வழக்குரைஞராக நியமித்தார், அந்த முதியவர் துர்காவுக்கு உதவி செய்ததன் நோக்கம் என்ன, பெண்ணைக் கொன்ற கணவனை துர்கா மன்னிப்பாளா என்பதுதான் மீதிக் கதை. இறுதியில் துர்கா தனது வாழ்க்கையில் எதிரிகளைப் பழிவாங்குகிறார். மோகன் துர்காவை மணக்கிறார்.
நடிகர்கள்தொகு
- தினநாத் வேடத்தில் அசோக்குமார்
- மோகனாக ராஜேஷ் கன்னா
- சுனில் நாராயணனாக ராஜ் பப்பர்
- துர்காவாக ஹேமமாலினி
- ஷெர்ரியாக அருணா இரானி
- ஜெகநாதராக பிரான்
பாடல்கள்தொகு
பாடல் | பாடியவர்கள் |
---|---|
"குச் கெஹ்னேவாலா தா மெயின், பர் பூல் கயா" | லதா மங்கேஷ்கர், முகமது ரபி |
"சினாக் சினாக்" | ஆஷா போஸ்லே |
"அப் நயா தமாஷா" | ஆஷா போஸ்லே |
"ஷெராவாலி தேரா தர்பார்" | ஆஷா போஸ்லே |
"ஓ நாரி துக்கியாரி" | மகேந்திர கபூர் |
"சசுரல் மே து ஹோகி அகேலி, சஹேலி ஜரா தட்கே ரஹியோ" | தில்ராஜ் கவுர், சந்திராணி முகர்ஜி |
"ஹாய் சாஞ்சி கர் தியோ கி" | ஆல்கா யாக்னிக் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Kapur Films". 21 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 May 2011 அன்று பார்க்கப்பட்டது.