கோலம் (ஆங்கில மொழி: Kolam, மலையாளம்: കോലം, கன்னடம்: ಕೋಲಂ) என்பது முகு (தெலுங்கு: ముగ్గు), தரை அலகங்காரம் மற்றும் ரங்கோலி (கன்னடம்: ರಂಗೋಲಿ)[1] என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மாவு அல்லது வேறு பொடிகளைப் பயன்படுத்தி பெண்களால் வரையப்படும் வடிவங்கள் ஆகும்.[2] கோலத்தின் பிறப்பிடம் தமிழகம் ஆகும். பழங்கால தமிழ்நாட்டிற்கு சொந்தமானது, இந்த கலை. இக்கலை பின்னர் மற்ற தென்னிந்திய மாநிலங்களான கருநாடகம், தெலங்காணா, ஆந்திரா மற்றும் கேரளாவிற்கும் பரவியுள்ளது. கோவா மற்றும் மகாராட்டிராவின் சில பகுதிகளிளும் கோலமிடுவதை இன்றும் காணலாம். புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகம் முழுவதும் இருப்பதால், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சில ஆசிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் கோலம் போடும் வழக்கம் காணப்படுகிறது. கோலம் அல்லது முகு என்பது நேர்கோடுகள், வளைவுகள் மற்றும் சுழல்களால் ஆன ஒரு வடிவியல் கோட்பாட்டு வரைதல் ஆகும். இது புள்ளிகளின் கட்ட வடிவத்தைச் சுற்றி வரையப்படுகிறது. ஆண்களும் சிறுவர்களும் கூட இந்த பாரம்பரியத்தை கடைப்பிடித்தாலும், பெண்களால் தங்கள் வீட்டு நுழைவாயிலுக்கு முன்னால் பரவலாகப் வரையப்படுகிறது.[3] கோலத்தின் பிராந்திய மாறுப்பாடுகள் இவற்றின் தனித்துவமான வடிவங்களுடன் இந்தியாவில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன: ரங்கோலி மகாராட்டிராவில், அரிப்பான் என [[மிதிலா (இந்தியா)|மிதிலாவிலும்] ], மேற்கு வங்கத்தில் அல்போனா என்றும் கருநாடகாவில் கன்னடத்தில் ஹசே மற்றும் ரங்கோலி என்றும் அழைக்கப்படுகிறது.[4] திருவிழா நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது மிகவும் சிக்கலான, சிறப்பான கோலங்கள் வரையப்பட்டு வண்ணங்கள் பலச் சேர்க்கப்படுகின்றன.

கோலமிடுவதற்கான பொருட்களும், முறையும்

தொகு

தமிழ்நாடு, இலங்கை போன்ற இடங்களில், கோலங்கள் அரிசிமாவு, முருகைக்கற்பொடி போன்ற வெண்ணிற உலர்வான பொடிகளைக் கொண்டு வரையப்படுகின்றன. பொதுவாக வெளியே தளர்வான மண்தரையாயின், நீர் தெளித்துப் புழுதி அடக்கப்படும். பின்னர் பெருவிரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் சிறிதளவு உலர் பொடியை எடுத்து, விரல்கள் நிலத்தில் படாமல், நிலத்துக்கு அரையங்குல உயரத்திலிருந்து, ஏற்கனவே எண்ணியபடியான வடிவம் கிடைக்கும் வகையில், பொடியைத் தூவிச் செல்வார்கள். பசுச் சாணம் முதலியவற்றால் மெழுகப்பட்ட மண் தரையிலோ அல்லது வேறு இறுக்கமான தரையிலோ கோலம் வரைவதாயின், சிலவேளைகளில் அரிசியை நீர்விட்டுப் பசைபோல் அரைத்துப் பின்னர் வேண்டிய அளவு நீர் விட்டுக் கரைத்து, அதை ஒரு துணியில் தோய்த்துக்கொண்டு விரல்களுக்கிடையே மெதுவாக வைத்து அழுத்த விரல்களில் வடியும் மாக்கரைசலினால் பேனாவால் வரைவதுபோல் கோலம் வரையலாம். காய்ந்த பின்னர் இது நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கக்கூடியது.

கோலங்களின் வகைகள்

தொகு
 
ஓர் எளிமையான கம்பிக் கோலம்

கோலங்களை அவை வரையப்படும் முறையை ஒட்டி இரண்டு பிரிவுகளாக வகுக்க முடியும்.[5][6]

  1. கம்பிக் கோலம்
  2. புள்ளிக் கோலம்

கம்பிக் கோலம்

தொகு

கம்பிக் கோலம் என்பது கோடுகளை எளிமையான வடிவவியல் ஒழுங்குகளில் வரைவதன் மூலம் அழகிய சீரான வடிவங்களைப் பெறுதலைக் குறிக்கும்.

புள்ளிக் கோலம்

தொகு

புள்ளிக் கோலம் என்பது, கோடுகளை வரையும் முன், வழிகாட்டல் புள்ளிகளை இட்டுக்கொண்டு அதன் அடிப்படையில் வடிவங்களை வரைவதாகும். புள்ளிகளிடுவதிலும் இருவித முறைகள் உள்ளன. ஒரு வகையில் கிடைவரிசையிலும், நிலைக்குத்துவரிசையிலும் ஒரு சதுர வலைப்பின்னல் வடிவில் அமையும்படி புள்ளிகள் இடப்படும். இரண்டாவது முறையில், நிலக்குத்தாக வரும் புள்ளித்தொடர்களில் (நிரல்கள்), ஒன்றுவிட்டு ஒரு நிரல்களிலுள்ள புள்ளிகள் ஒரே கிடைக் கோட்டிலும், அவற்றினிடையே வரும் நிரல்களிலுள்ள புள்ளிகள், முன்கூறிய வரிசைகளுக்கு இடையிலும் வரும். இவ்வாறு போடப்படும் புள்ளிகள் சமபக்க முக்கோண வலைப்பின்னல் வடிவில் அமைந்திருக்கும். இவ்விரு வகைகளையும் முறையே:

  • நேர்ப் புள்ளிகள்
  • ஊடு புள்ளிகள்

என்று கூறுவர்.

     

சதுர வலைப்பின்னல்
வடிவில் புள்ளிகள்

நேர்ப் புள்ளிகள் ஊடுபுள்ளிகள்

இப்புள்ளிக் கோலங்களும், புள்ளிகள் தொடர்பில் கோடுகள் வரையப்படும் முறைபற்றி இருவகையாகப் பகுக்கலாம்.

  • புள்ளிகளில் தொடாது, அவற்றுக்கு இடையால் வரையப்படும் நேர் அல்லது வளை கோடுகள் மூலம் வடிவங்களை உருவாக்கல்.
   
புள்ளிகளூடு
வளைகோடுகள்-1
புள்ளிகளூடு
வளைகோடுகள்-2
  • புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் வடிவங்களை உருவாக்கல்.
   

நேர்கோடுகளால்
இணைக்கப்பட்ட
புள்ளிகள்

வளைகோடுகளால்
இணைக்கப்பட்ட
புள்ளிகள்

அநேகமாக எல்லாக் கேத்திரகணித வடிவ அமைப்புகளைப் பற்றி வரையப்படும் கோலங்களையும் முடிவின்றி விரிவாக்கிக்கொண்டு செல்லலாம்.

கோலமிடப் பயன்படும் பொருட்கள்

தொகு

ஆராய்ச்சி

தொகு

கோலங்களின் கணிதப் பண்புகளை கணினி அறிவியல் துறை பயன்படுத்துகின்றது.[7] கோலம் வடிவங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பல்வேறு வடிவங்களுடன் கோலம் வடிவமைப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோலம் வரைவதற்கான வழிமுறைகள் படம் வரைதல் கணினி மென்பொருளின் வளர்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன.[8] கோலங்கள் கணக்கீட்டு மானுடவியலில் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.[9] கோலங்கள் சமகால கலை மற்றும் வரலாற்றுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பதால், இவை கலை மற்றும் ஊடகத் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.[10] கோலங்கள் சிக்கலான புரதக் கட்டமைப்புகளின் பிரதிநிதித்துவத்தை எளிதாகப் புரிந்துகொள்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.[11]

 
பக்தர் ஒருவரால் கொல்லூர் மூகாம்பிகை கோயில் வாயிலில் வரையப்படும் கோலம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Kolams". Auroville. Archived from the original on 30 December 2011. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
  2. Dr.Gift Siromoney. "KOLAM". Chennai Mathematical Institute. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
  3. Dr.Gift Siromoney. "KOLAM". Chennai Mathematical Institute. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
  4. "Kolams". Auroville. Archived from the original on 30 December 2011. பார்க்கப்பட்ட நாள் 12 January 2012.
  5. Dr.Gift Siromoney. "Kolam-South Indian kolam patterns". Chennai Mathematical Institute. பார்க்கப்பட்ட நாள் 13 January 2012.
  6. Balaji, S.; Neela, S. (2013). Protein Kolam: An Artistic Rendition of Molecular Structure Data. Leonardo, 46(1), 24–29. doi:10.1162/leon_a_00480
  7. Marcia Ascher (சனவரி 2002). "The Kolam tradition". American Scientist. Archived from the original on 30 செப்டெம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2012.
  8. "Kolam figures" (PDF). Mathematics department, Iowa State University. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
  9. "The Kolam project". Center for Undergraduate Research, University of Maine. Archived from the original on 7 March 2012. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
  10. Adam Atkinson (September 2011). "The Mystery of Kolam". Northampton Community College. Archived from the original on 13 October 2012. பார்க்கப்பட்ட நாள் 25 January 2012.
  11. Protein Kolam

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kolam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • சு. சக்திவேல் தமிழர் பண்பாட்டில் கோலங்கள் மணிவாசகர் பதிப்பக வெளியீடு

கோலசுரபி - கோலம் உருவாக்கும் இணைய செயலி

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலம்&oldid=3891634" இலிருந்து மீள்விக்கப்பட்டது