இந்து சமயப் பிரிவுகள்
பொதுவாக இந்து சமயம் எனப்படும் தொன்று தொட்டு வரும் சமயத்தில் உள்ள பற்பல பிரிவுகள் உண்டு. ஆதி சங்கரர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் தொகுத்தவையாகக் கொள்ளப்படும் ஆறு உட்பிரிவுகள் சிவன், திருமால், சக்தி, சூரியன், கணபதி, முருகன் ஆகிய ஆறு கடவுளர்களை அவ்வவ் பிரிவிற்குத் தலையாய முழுமுதற் கடவுளாகக் கொண்டவை. ஸ்மார்த்தம் என்பது ஆறு கடவுளரையும் வணங்கும் பிரிவு.[1] இந்த ஆறு பிரிவுகளுக்கும் பல பிரிவுகள், உட்பிரிவுகள் மற்றும் தத்துவங்கள் உள்ளன. தமிழ் மரபிலும், பிற இந்தியப் பழங்குடிகளின் மரபிலும் பற்பல வேறுபாடுகள் உண்டு. 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு பெரும்பாலான பெரிய பிரிவுகள் சைவம் மற்றும் வைணவத்தில் இணைந்தன. தொல்காப்பியத்தின்படி, 5 நிலங்களில் 5 பெரும் கடவுள்கள் உள்ளன.
ஆசீவகம், சமணம், பௌத்தம் போன்ற சமயங்கள் மற்றும் சீக்கியம், அய்யாவழி, ஆரிய சமாஜ் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் அனைத்து தெற்காசிய நாட்டுப்புற மரபு மதங்களும் இந்து மதமாக கருதப்படுகின்றன.[2]
சங்கரரது காலத்தில் இம் மதங்களிடையே போட்டி பொறாமைகள் இருந்தன இவற்றை சீர் செய்து ஒவ்வொரு மதத்திற்குமான ஆகமங்கள் பிராமண நூல்கள் என்பவற்றை வகுத்து இம் மதங்களின் முழுமுதற் கடவுள்களிடையே உறவு முறைகளை நிலை நாட்டி சண்மதங்களை மீள் ஸ்தாபனம் செய்தவர் ஆதி சங்கரர் ஆவார். இம் மதங்கள் இன்று வரை செல்வாக்குடனும் , சிறப்புடனும் விளங்குகின்றது.[3]
- சைவம் - சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
- வைணவம் - விஷ்ணுவையும் அவரது பத்து அவதாரங்களையும் வணங்கும் சமயப் பிரிவு.
- சாக்தம் - சக்தியை வணங்கும் சமயப் பிரிவு.
- கௌமாரம் - முருகனை வணங்கும் சமயப் பிரிவு (குமரனை வணங்குவது கௌமாரம்).
- சௌரம் - சூரியனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
- கணாபத்தியம் - விநாயகரை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சமயப் பிரிவு.
- சுமார்த்தம் - சிவன், சக்தி, விஷ்ணு, கணேசர், சூரியன் மற்றும் முருகனை வணங்கும் சமயப் பிரிவு. மேலுள்ளவற்றில் முதல் ஆறு பிரிவுகளையும் உள்ளடக்கியது சுமார்த்தம்.
கௌமாரம் மற்றும் கணாபத்தியம் ஆகியவை சைவ மதத்தின் துணைப்பிரிவாகக் கருதப்படுகின்றன.
இந்த பிரிவுகளில் இருக்கும் ஒற்றுமைகள் அல்லது வேற்றுமைகள் கீழுள்ள கருத்துக்களில் பார்க்கலாம்:
இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி
தொகு- சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.[4]
- சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
- வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
- சுமார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.
ஜீவனும், பரமனும் பற்றி
தொகு- சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
- சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத மோக்ஷம் அடையலாம்.
- வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
- சுமார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.
பயிற்சிகள்
தொகு- சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது.
- சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
- வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
- சுமார்த்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.
மறைகள்
தொகு- சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
- சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
- வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள், பிரபந்தம்
பரவியுள்ள பகுதிகள்
தொகு- சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை.
- சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா.
- வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
- சுமார்த்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Adi Shankaracharya Biography - Childhood, Teachings, Philosophy, Death". www.culturalindia.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
- ↑ "With reference to the religion in early medieval India, - GKToday". www.gktoday.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
- ↑ "அறுவகைச் சமயம்". e-Kalvi (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-06-09. பார்க்கப்பட்ட நாள் 2020-06-14.
- ↑ சைவம்.ஆர்க் - சிவனுக்கு அவதாரம் உண்டா?[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- இந்து மதத்தின் நான்கு பிரிவுகள். பரணிடப்பட்டது 2009-01-08 at the வந்தவழி இயந்திரம்