நெய்வேத்தியம்
இறைவனுக்கு படைக்கப்படும் உணவு
நைவேத்தியம் (நெய்வேத்தியம்) (Naivedhya) என்பது இறைவனுக்கு படைக்கப்படும் உணவு. உணவு உண்ணும் முன், இந்துக்கள் இறைவனுக்கு உணவு படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே கடவுளுக்குப் படைப்பதற்கான உணவைத் தயாரிக்கும் சமயத்திலும், காணிக்கை செலுத்தும் சமயத்திலும் அவ்வுணவை உண்ணுதல் தவறான பண்பாடு. இறைவனுக்கு அளித்து, தங்களின் கோரிக்கைகளை மந்திரங்கள் கூறி வேண்டுவர். நைவேத்தியம் என்ற சொல் இறைவனுக்கு அளிக்கப்படுவது என்று பொருள் தரும். அது உணவாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. நைவேத்தியம் என்பது பிரசாதத்தில் இருந்து வேறுபடுகிறது. பிரசாதம் என்பது கடவுளிடம் இருந்து நாம் பெறுவது.[1]