பாதுகை

இந்திய செருப்பு

பாதுகை (Paduka) என்பது இந்தியாவில் உள்ள காலணிகளின் ஒரு பழங்கால வடிவமாகும். இது பெருவிரலுக்கும் இரண்டாவது விரலுக்கும் இடையில் ஒரு காம்புடன் கூடிய குமிழைக் கொண்டதாகும். [2] இது தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வரலாற்று ரீதியாக அணியப்பட்டது. பாதுகை பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு பொருட்களாலும் செய்யப்பட்டு உள்ளது. இவை பொதுவாக பாதத்தைப் போன்றோ அல்லது மீன் வடிவத்திலோ செய்யப்பட்டிருக்கலாம். இவை மரம், தந்தம், வெள்ளியால் செய்யப்பட்டவையாகும். மணப்பெண்ணின் கால்சட்டைக்கு பொருத்தமாக பயன்படுத்தப்படும்போது அவை விரிவான வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கலாம். இவை மதப் புனிதப்பொருளாகவும் கொடுக்கப்படலாம் அல்லது அவையே வணக்கத்திற்குரிய பொருளாக இருக்கலாம். [1]

உயரமான மேடையுடன் கூடிய பாதுகை. [1]

எளிய மரத்தாலான பாதுகைகளை சாதாரண மக்கள் அணிவர். என்றாலும் தேக்கு, கருங்காலி, சந்தனம் போன்றவற்றால் செய்யப்படும் ஆடம்பரமான பாதுகைகளில், தந்தம், உலோகங்கள் பதிக்கப்பட்டவையாக இருக்கும். இவை அணிந்தவரின் சமூக அந்தஸ்தைக் குறிக்கின்றன. [2] நவீன உலகில், பாதுகைகளானது இந்து, பௌத்தம், சைவம், சமண சமயத்தின் துறவிகள் அல்லது புனிதர்களால் அணியப்படுகின்றன. பாதுகையானது இந்து சமயத்தில் முக்கியத்துவம் கொண்ட இராமாயண காவியக் கதையுடன் நெருக்கமான இணைப்பைக் கொண்டுள்ளது. "பாதுகை" என்பது தெய்வங்கள் மற்றும் புனிதர்களின் கால்தடங்களையும் குறிக்கலாம், அவை [3] [4] [5] [6] அடையாள வடிவத்தில் வீடுகளிலும், கோயில்களிலும் வணங்கப்படுகின்றன. இந்தியாவின் கயாவில் உள்ள விஷ்ணுபாதம் கோயில் அத்தகைய ஒரு கோயில் ஆகும். அதேபோல, புத்கயாவில் உள்ள போதி மரத்தின் அடியில் புத்தரின் பாதச்சுவடுகள் வழிபடப்படுகின்றன. [6] [7]

மலேசியாவில் பாதுகை அரச சின்னமாக உள்ளது. செரி பாதுகா என்பது "மாட்சிமை தாங்கிய" என்பதைக் குறிக்கிறது, இது மலேசிய அவைகளில் உயரதிகாரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் மரியாதைக்குரியதாக வழங்கப்படும் பட்டமாகும். [8] [9]

சிற்பத்தின் பாதுகையின் தோற்றம், ஒரிசா மாநில அருங்காட்சியகம், புவனேஸ்வரம்

சொற்பிறப்பியல்

தொகு
 
ஹேன்ஸ் ஸ்லோன் ( 1660-1753) சேகரித்த இந்திய பாதுகை வர்ணம் பூசப்பட்டது. இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ளது

சமஸ்கிருத சொல்லான பாதுகா என்பது பாதம் என்பதிலிருந்து வந்தது, அதாவது. இந்தியாவின் பண்டைய தொன்மையான காலணிகளை குறிப்பிட இந்த சொல் உருவாக்கப்பட்டது. [1]

தொன்மக்கதைகள்

தொகு

தொன்மையான இந்து வேதமான இருக்கு வேதத்தில் பாத என்ற சொல்லானது பிரபஞ்சத்தை குறிக்கிறது. அதாவது பிருத்வி (பூமி), வாயு (காற்று), ஆகாஷ் (ஆகாயம்) மற்றும் வானத்திற்கு அப்பால் உள்ள மண்டலத்ததில் பகுதி. [7]

இந்து இதிகாசமான இராமாயணத்தில், விதிவசத்தால் மன்னர் தசரதன் தன் மகன் இராமனை 14 ஆண்டுகள் நாடுகடத்தினார். அவரது மனைவி கைகேயியின் (இராமனின் மாற்றாந்தாய்) வற்புருத்தலின் பேரில், இராமனுக்கு பதில் அவரது இன்னொரு மகனான பரதனுக்கு முடிசூட்டப்பட வேண்டும் என்ற நிலைக்க தள்ளப்பட்டார். இருப்பினும், பரதன் அரச பதவியைப் பெற விரும்பவில்லை. மேலும் வசவாசத்தில் உள்ள இராமனைச் சந்தித்து அயோத்திக்குத் திரும்பும்படி கெஞ்சினான். வனவாசத்தை முடித்துக் கொண்டு தான் திரும்பி வருவேன் என்று ராமர் பதிலளித்தபோது, பரதன் ராமரின் பாதுகையை அரியணையில் ஏற்றி அவருக்கு பதிலாக அரசபிரதிநிதியாக இருந்து பணியாற்ற விரும்பியும், இராமனைப் பின்பற்றுபவர்களுக்கு வணக்கத்திற்குரிய பொருளாக பயன்படுத்தவும் கோரினார். பரதன் தன் அண்ணிடம் உள்ள விசுவாசத்தின் அடையாளமாக இராமனின் தங்கப் பாதுகைகளைத் தலையில் வைத்து மிகுந்த மரியாதையுடன் எடுத்துவந்தான். பரதன் "இராமனின் பாதுகைகள்" சார்பாக கோசலை நாட்டை இரமனின் பேராளராக இருந்து ஆண்டான். [7] [8]

அமைப்பு

தொகு
 
பாதுகை அணிந்த c. 1922 .

பாதுகையானது அடிப்படையில் ஒரு செருப்பு ஆகும். இது பொதுவாக மரத்தாலான பலகையில் செய்யப்பட்டிருக்கும். காலின் கட்டை விரல் மற்றும் இரண்டாவது விரல்களுக்கு இடையில் பிடிமானத்தை வழங்க ஒரு குமிழுடன்கூடிய காம்பைக் கொண்டிருக்கும். உள்ளங்காலில் இதை நிலைநிறுத்த எந்த விதமான பட்டைகளும் இதில் இல்லை. எனவே இதை அணிந்திருப்பவர் நடக்கும்போது இரண்டு விரல்களுக்கு இடையில் உள்ள காம்பை நன்கு பிடித்திருக்க வேண்டும். [10]

இது கடாவ், கரோ, காரவான், கரோம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இது இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பாலும் துறவிகள், புனிதர்கள், சாமானியர்களால் பயன்படுத்தப்படுகிறது. [1] பாதுகைகளின் அடியில் இரண்டு இரண்டு சிறிய வளைந்த பலகைகள் போன்ற பகுதியானது நின்றவாக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இது இந்து, சைன சமயத் துறவிகளால் கடைபிடிக்கப்படும் அகிம்சைக் கொள்கையின்படி பூச்சிகள், தாவரங்கள் போன்றவற்றை தற்செயலாக மிதித்து அதன் மூலம் அவற்றிற்கு ஊறு நேராமல் இருப்பதை இருப்பதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய பாதுகையை அணிந்த பிராமணர்கள் "இந்தப் பாதத்தை உங்கள் மீது வைத்து நான் செய்யும் காயத்தின் பாவத்தையும் வன்முறையையும் பூமித் தாயே மன்னியும்" என்று பிரார்த்தனை செய்வதைக் கேட்கலாம். [11]

தந்தத்தால் செய்யப்பட்ட பாதுகைகளை அரச குடும்பத்தார் மற்றும் துறவிகள் மத்தியில் பிரபலமாக பயன்பாட்டில் இருந்தது. இந்து சமய நெறிமுறைகளின்படி, யானைத் தந்தங்களானது இயற்கையாக இறந்த யானைகளிடமிருந்து எடுக்கப்பட வேண்டும் அல்லது வளர்ப்பு யானைகளிடமிருந்து அறுத்து எடுக்கப்பட வேண்டும். இது அகிம்சையான வழியாக உள்ளது. [12] உயர் சமூக அந்தஸ்தில் உள்ளவர்கள் மெல்லிய தேக்கு, கருங்கலி, சந்தன மரங்களால் செய்யப்பட்ட பாதுகைகளை அணிவர். அதில் தந்தம் அல்லது உலோகத்தாலான வேலைப்பாடுகளை பதிப்பர். அவை கருவுறுதலைக் குறிக்கும் வகையில் மீன் வடிவத்திலும் செய்யப்படுகின்றன. [13]

சிறப்பு நிகழ்வுகளில் அணியும் பாதுகைகள் பிற வடிவங்களில் மரத்தால் செய்யப்படு அதில் வெள்ளித் தகடுகளால் வேயப்பட்டிருக்கலாம் சில நேரங்களில் நடைக்கும்போது மணிகள் ஒலிக்கத்தகதாக அலங்கரிக்கப்பட்டிருக்கலாம். வெண்கல மற்றும் பித்தளை பாதுகைகள் சடங்குகளில் பயன்படுத்த அணிய பயன்படுத்துவதாக இருக்கலாம். [14]

சடங்குகள் செய்யும்போது பயன்படுத்தும் கூர்மையான இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டு காலணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை அணிந்துநடக்கும்போது கால்களில் ஆணிகள் குத்துவதால் ஏற்படும் வலியை மத ரீதியாக சகித்துக்கொள்வதில் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்த, இது பயன்படுத்தப்பட்டது என்று ஊகிக்கப்படுகிறது. [4]

வழிபாடு

தொகு
 
துறவி ஞானேஸ்வரரின் பாதுகை வெள்ளி மாட்டு வண்டியில் பல்லக்கில் ஏற்றப்பட்டு ஆலந்தியிலிருந்து பண்டரிபுரத்துக்கு ஊர்வலமாகச் செல்லப்படுகிறது.

மணப்பெண்ணின் வரதட்சணையின் ஒரு பகுதியாக பாதுகை சிலசமயம் பரிசளிக்கப்படுகிறது. அவை உண்மையான விசுவாசிகளால் வணங்கப்படும் புனிதப் பொருளாக வழங்கப்படுகின்றது. [11]

இந்து சமயக் கடவுளான விட்டலர் தொடர்புடைய திருவிழாவில் கவிஞர்-துறவிகளான ஞானேஷ்வர் மற்றும் துக்காராம் ஆகியோருடன் (முறையே) நெருங்கிய தொடர்புடைய ஆளந்தி மற்றும் தேஹு நகரங்களிலிருந்து பக்தர்கள் அவரது பந்தர்பூர் கோயிலுக்கு வெள்ளிப் பல்லக்கில் புனிதர்களின் பாதுகாக்களை சுமந்து செல்கிறார்கள்.

புத்தர் ஞானம் பெற்ற புத்த கயாவில் உள்ள போதி மரத்தின் கீழே, புத்தரின் பாதம் பதிக்கப்பட்டுள்ள ஒரு காலியான சிம்மாசனம் உள்ளது. இந்த இடம் மிகவும் போற்றப்படுகிறது. [7]

பாதுகா சஹஸ்ரம்

தொகு

பாதுகா சஹஸ்ரம் (அதாவது "இறைவனுடைய பாதுகைகளில் 1,000 வசனங்கள்" என்று பொருள்படும்) என்பது தமிழ்நாட்டின் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோயிலில் உள்ள விஷ்ணுவின் பாதுகையை (பாதங்கள்) வழிபட்டுப் போற்றும் பக்திப் பாடல் ஆகும். இது ஸ்ரீ சம்பிரதாயம் அல்லது ஸ்ரீ வைஷ்ணவத்தின் புனிதமான நூலாகக் கருதப்படுகிறது. விசிஷ்டாத்வைத தத்துவத்தைப் பின்பற்றிய சுவாமி வேதாந்த தேசிகரால் 32 அத்தியாயங்களில் 1,008 சுலோகங்களில் சஹஸ்ரம் இயற்றப்பட்டது. தேசிகர் தனது எதிர் குழுவினரான தென்கலை ஐயங்கார்களுக்கு கால் இரவில் ஒரு சவாலாக இதை இயற்றினார் என்றும் கூறப்படுகிறது. 14 ஆண்டுகள் அயோத்தி நாட்டை ஆண்ட இரமனின் பாதுகைகளை மையமாக வைத்து இறைவனின் பாதுகையின் புகழ்பாடப்பட்டுள்ளது. அயோத்தி மக்கள் ராமரின் பாதுகையுடன் கொண்டிருந்த சிறப்பான உறவின் காரணமாக அவர்கள் வாழ்வில் முக்தி அடைந்தனர் என்று தேசிகர் கூறுகிறார். [15]

 
சச்சிதானந்த உற்சவத்தின் போது செய்யப்படும் பாதுகா பூஜை

குரு பாதுகா ஸ்தோத்திரம்

தொகு

ஆதி சங்கரர் "குரு பாதுகா ஸ்தோத்திரம்" என்ற பெயரில் ஒன்பது பக்தி சுலோகங்களையும் தனது குருவை (இறைவனை) வணங்கும் வகையில் எழுதியுள்ளார்க்கமாக எழுதியுள்ளார். [16]

படக்காட்சியகம்

தொகு


குறிப்புகள்

தொகு

 

  1. 1.0 1.1 1.2 1.3 "britishmuseum.org". Archived from the original on 2015-10-25. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
  2. 2.0 2.1 "All About Shoes - The Bata Shoe Museum". Archived from the original on 2009-12-29. பார்க்கப்பட்ட நாள் 2021-11-24.
  3. "The Paduka". Archived from the original on 29 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Paduka". Fashion Encyclopedia. Archived from the original on 2 February 2010. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009.
  5. "Feet and Footwear in the Indian Tradition". Archived from the original on 17 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 Monier Monier-Williams. "Sanskrit Lexicon". p. 618. Archived from the original on 14 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 27 December 2009.
  7. 7.0 7.1 7.2 7.3 "In the Footsteps of the Divine". Archived from the original on 13 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. 8.0 8.1 Kampar (1969). Sri Paduka: the exile of the Prince of Ayodhya. Ohio University, Center for International Studies. pp. 3, 4. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009.
  9. Rigg (1862). A Dictionary of the Sunda language. Lange & Co.
  10. Jutta Jain-Neubauer, Feet and Footwear in Indian Culture, 2000, Bata Shoe Museum
  11. 11.0 11.1 "The Paduka". Archived from the original on 12 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "The Ivory Padukas". Archived from the original on 13 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "The sandalwood Padukas". Archived from the original on 13 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Metal Padukas". Archived from the original on 13 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 26 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "Swami Swami Desikan's Sri Ranganatha Paadhuka Sahsram". Annotated Translation into English by Oppilippan Koil Sri Varadachari Sahtakopan. Scribd. பார்க்கப்பட்ட நாள் 29 December 2009.{{cite web}}: CS1 maint: others (link)
  16. "Guru Paduka stotram". பார்க்கப்பட்ட நாள் 29 December 2009.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதுகை&oldid=3784482" இலிருந்து மீள்விக்கப்பட்டது