கயை அல்லது கயா (Gaya, இந்தி: गया) இந்திய மாநிலம் பிகாரில் உள்ள ஓர் மாநகரம் ஆகும். இது கயை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். கயையில் இந்து சமயத்தினர் நீத்தார் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

கயா
மாநகராட்சி
விஷ்ணுபாதம் கோயில், கயா
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
பிரதேசம்மகத நாடு
மாவட்டம்கயா
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்கயா மாநகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்90.17 km2 (34.81 sq mi)
ஏற்றம்111 m (364 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்468,614
 • தரவரிசை98-ஆவது (இந்தியா) 2-ஆவது (பிகார்)
 • அடர்த்தி9,482/km2 (24,560/sq mi)
இனங்கள்கயை மக்கள் [2]
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி, ஆங்கிலம், உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்823 001 – 13
தொலைபேசி குறியீடு91-631
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR 02
தொடருந்து நிலையம்கயா சந்திப்பு தொடருந்து நிலையம்
வானுர்தி நிலையம்கயா பன்னாட்டு வானூர்தி நிலையம்
இணையதளம்www.gaya.bih.nic.in , Apna Gaya Official
இந்தியாவின் பிகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தின் அமைவிடம்

கயை நகரம், பிகார் மாநிலத்தலைநகர் பட்னாவிலிருந்து 100 கி.மீ. தெற்கில் உள்ளது. மேலும் வாரணாசி நகரத்திற்கு கிழக்கே 257 கி.மீ. தொலைவில் உள்ளது. பௌத்தர்களின் புனித தலமான புத்தகயா, கயைக்கு தெற்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

இராமாயணத்தில் நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்துக்களுக்கும் பௌத்த சமயத்தினருக்கும் முக்கியமான புண்ணியத் தலமாக விளங்குகிறது. பால்கு ஆற்றாங்கரையில் விஷ்ணுபாதம் கோயில் உள்ளது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது. இயற்கைசூழல் மிக்க இடங்களும் பழைமையான கட்டிடங்களும் குறுகலான சந்துகளுமாக நகரம் கலவையாக உள்ளது. இது தொன்மையான மகத இராச்சியத்தின் அங்கமாக இருந்தது.

வரலாறு தொகு

தொன்மை வரலாறு தொகு

கயையின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு கௌதம புத்தரின் பெரும்ஞானநிலையை பெற்றதிலிருந்து கிடைக்கின்றன. இவ்வாறு ஞானம் பெற்ற இடம் உள்ள கயையிலிருந்து 15 கிமீ தொலைவில் புத்தகயா உள்ளது. ராஜகிரகம், நாளந்தா, நாலந்தா பல்கலைக்கழகம், வைசாலி, பாடலிபுத்திரம் ஆகிய இடங்களில் உலகெங்குமிருந்து அறிஞர்கள் அறிவு வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அறிவு மையங்கள் மௌரியப் பேரரசு காலத்தில் மேலும் வலுப்பெற்றன.

அண்மைக்கால வரலாறு தொகு

கயா நகரில்[3] பூசாரிகள் வசித்த பகுதி கயை என்றும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் வாழ்ந்த பகுதி இலாகாபாத் என்றும் அழைக்கப்பட்டது. இதுவே பின்னர் புகழ்பெற்ற ஆட்சியர் தாமசு லா காலத்தில் அவர் நினைவாக சாகேப்கஞ்ச் என அழைக்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்திலும் கயை முக்கிய பங்காற்றி உள்ளது. 1922 ஆம் ஆண்டு காங்கிரசின் அனைத்திந்திய மாநாடு தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் இங்குதான் கூடியது.

மக்கள் தொகையியல் தொகு

2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணககெடுப்பின் படி, கயா மாநகரத்தின் மொத்த மக்கள்தொகை 4,68,614 ஆகும். அதில் ஆண்கள் 247,131 ஆகவும்; பெண்கள் 221,483 ஆகவும் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 81.63 % ஆக உள்ளது. ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 62,389 ஆகும். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு, 896 பெண்கள் வீதம் உள்ளனர்.[4] மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 79.43 % ஆகவும், இசுலாமியர்கள் 18.65 % ஆகவும்; பிறர் 1.02% ஆகவும் உள்ளனர். மக்களில் பெரும்பான்மையினர் இந்தி மொழி மற்றும் உருது பேசுகின்றனர்.

போக்குவரத்து தொகு

தொடருந்து சந்திப்பு நிலையம் தொகு

கயா பன்னாட்டு வானூர்தி நிலையம் தொகு

கயா பன்னாட்டு வானூர்தி நிலையம், வாரணாசி, தில்லி, கொல்கத்தா போன்ற இந்திய நகரங்களையும் மற்றும் ரங்கூன், பேங்காக், ஹோ சி மின் நகரம், கொழும்பு போன்ற வெளிநாட்டு நகரங்களுடன் இணைக்கிறது.[6]

நீத்தார் வழிபாடு தொகு

கயையின் பால்கு ஆற்றின் கரையில் இந்து சமயத்தினர், நீத்தாரை வழிபடும் விதமாக பிண்ட தானம் மற்றும் தர்ப்பணம் செய்யும் சடங்கு புகழ்பெற்றது.[7]

காலநிலை தொகு

தட்பவெப்ப நிலைத் தகவல், Gaya, India
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.9
(75)
26.7
(80)
33.3
(92)
38.9
(102)
40.6
(105)
38.3
(101)
33.3
(92)
32.2
(90)
32.8
(91)
31.7
(89)
28.9
(84)
25
(77)
32.13
(89.8)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
12.8
(55)
17.8
(64)
23.3
(74)
26.7
(80)
27.8
(82)
26.1
(79)
25.6
(78)
25
(77)
21.7
(71)
14.4
(58)
10
(50)
20.09
(68.2)
பொழிவு mm (inches) 20
(0.8)
20
(0.8)
13
(0.5)
8
(0.3)
20
(0.8)
137
(5.4)
315
(12.4)
328
(12.9)
206
(8.1)
53
(2.1)
10
(0.4)
3
(0.1)
1,133
(44.6)
ஆதாரம்: Weatherbase[8]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கயை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயை&oldid=3729427" இருந்து மீள்விக்கப்பட்டது