படித்துறை அல்லது காட் (ghat) என்ற வட மொழிச் சொல்லிற்கு நீர் நிலைகளில் இறங்கி குளிப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கும் வரிசையாக பரந்த படிகள் கொண்ட கட்டிட அமைப்பு எனப் பொருளாகும். இராமேஷ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம் போன்ற புனிதக் கடல் பகுதி, கங்கை ஆறு, சிப்ரா ஆறு, காவேரி ஆறு போன்ற புனித ஆறுகள், பிரம்மசரோவர், புஷ்கர் போன்ற புனித குளங்களில் இறங்கி புனித நீராடுவதற்காக வரிசையான படிக்கட்டுகள் கொண்ட அமைப்பாகும்.[1][2][3]

தசாஷ்வமேத படித்துறை, வாரணாசி

படித்துறைகளில் வழிபாடு, சடங்குகள் மற்றும் கும்பமேளா தொகு

புனித கங்கை ஆறு, காவேரி ஆறு, சிப்ரா ஆறு, நர்மதை ஆறு, துங்கபத்திரை ஆறு, கிருஷ்ணா ஆறு மற்றும் நர்மதை ஆறுகளில் மக்கள் இறங்கி குளிப்பதற்கு பல படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளது. புனித ஆறு, குளங்களின் படித்துறைகளில் நீத்தார் வழிபாடு போன்ற சமயச் சடங்குகள் செய்யப்படுகிறது. மேலும் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் முடிந்தவுடன் இதுபோன்ற நீர்நிலைகளில் குளிப்பது இந்துக்களின் மரபாகும்.

மேலும் கங்கை பாயும் வாராணசியின் மணிகர்னிகா படித்துறை மற்றும் அரிச்சந்திரன் படித்துறை, மற்றும் நேபாளத்தின் பசுபதிநாத் கோவில் அருகே பாயும் பாக்மதி ஆற்றின் படித்துறைகளில் இறந்தவர்களின் சடலங்களில் எரிப்பதால், இறந்தவர் வீடுபேறு அடைவர் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா எனும் திருவிழா இந்தியாவின் கங்கை ஆறு பாயும் அரித்துவார், வாராணசி, பிரயாகை மற்றும் சிப்ரா ஆறு பாயும் உஜ்ஜைன் நகரங்களில் நடைபெறுகிறது.[4][5]

சடலங்களை எரியூட்டும் படித்துறைகள் தொகு

இந்தியாவின் வாரணாசியில் உள்ள மணிகர்னிகா படித்துறை மற்றும் அரிச்சந்திரன் படித்துறையிலும், நேபாள நாட்டின், பசுபதிநாத் கோவில் அருகே பாயும் பாக்மதி ஆற்றின் படித்துறைகளில் இறந்த இந்துக்களின் சடலங்களை எரிப்பதால் வீடுபேறு கிட்டும் என நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது.

வாரணாசி படித்துறைகள்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. வாரணாசியில் உள்ள படித்துறைகள்
  2. வாரணாசியில் உள்ள படித்துறைகள்
  3. "[[சிப்ரா ஆறு|சிப்ரா ஆற்றின்]] படித்துறைகள்". 2017-03-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-03-07 அன்று பார்க்கப்பட்டது.
  4. Kumbh Mela in Ujjain (Simhastha)
  5. Haridwar Ardh Kumbh Mela 2016

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ghats
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படித்துறை&oldid=3561646" இருந்து மீள்விக்கப்பட்டது