தசாஸ்வமேத படித்துறை

(தசாஷ்வமேத படித்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தச அஸ்வமேத படித்துறை (ஆங்கிலம்: Dashashwamedha ghat) (இந்தி: दशाश्वमेध घाट) வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் அமைந்துள்ள 85 படித்துறைகளில் முதன்மையானதாகும். இப்படித்துறை, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு[1] மிக அருகில் அமைந்துள்ளது. இந்து புராணக் கதைகளின்படி, இப்படித்துறையில் பிரம்மா அஷ்வமேத யாகம் செய்யும் போது பத்து குதிரைகளை (அஷ்வம்) பலியிட்டார் என்றும் மற்றொரு புராணக்கதையின்படி பிரம்மா இங்கு படித்துறை அமைத்து சிவபெருமானை எழுந்தருளச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.[2].[3]

கங்கைக் கரையில் உள்ள தசஅஷ்வமேத காட் (படித்துறை), வாரணாசி
தச அஷ்வமேத படித்துறையில் பிதுர் கடன்கள் செய்யும் பூசாரி

கங்கை ஆரத்தி தொகு

 
கங்கை ஆரத்தி, வாரணாசி

இப்படித்துறையில் கங்கை ஆறு, அக்னி தேவன், சிவபெருமான், சூரிய தேவன் மற்றும் முழு பிரபஞ்சத்திற்கும், பூசாரிகளால் நாள்தோறும் மாலையில் கங்கை ஆற்றுக்கு ஆரத்தி பூஜை நடத்தப்படுகிறது. மேலும் செவ்வாய்க் கிழமை தோறும் மற்றும் முக்கியமான சமயத் திருவிழாக்களின் போதும் சிறப்பு கங்கை ஆரத்தி பூஜைகள் நடத்தப்படுகிறது.[4]

கங்கை ஆரத்தி பூஜைக்கான படிநிலைகள் தொகு

2010 குண்டு வெடிப்பு தொகு

வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றின் சித்ல காட் பகுதியின் தென்முனையில் நடந்து கொண்டிருந்த கங்கை ஆரத்தி பூஜையின் போது 7-12-2010 அன்று தீவிரவாதிகளின் குண்டுவீச்சில் இரண்டு பக்தர்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 37 பேரில் ஆறு நபர்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். இந்தியன் முஜாகிதீன் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.[5][6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தசாஸ்வமேத_படித்துறை&oldid=3556965" இருந்து மீள்விக்கப்பட்டது