பராபக்தி
பராபக்தி என்பது பிரம்மத்தைப் பற்றிய அறிவு ஆகும். ஒருவன் ஆத்மா எனும் பிரம்மத்தை பற்றிய அறிவை அடைய, தக்க குருவின் துணையுடன் உபநிடதம், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதை போன்ற வேதாந்த சாத்திரங்களை பயின்று, அனைத்திலும் சமத்துவ மனதுடன் வாழ்ந்து ஸத் சித் ஆனந்த மயமான பிரம்மத்தை அடையும் வழியே பராபக்தியாகும். பிரம்ம ஞானம் (பிரம்மத்தைப் பற்றிய அறிவு) தவிர பிற பொருட்களின் அறிவுகள் எல்லாம் அபராபக்தி என்பர்.
உசாத்துணை
தொகு- பகவத் கீதை, அத்தியாயம் 12, பக்தி யோகம்