சிரார்த்தம்

சிரார்த்தம்(சமசுகிருதம்: श्राद्ध) என்பது இந்து மத அனுட்டனாங்களில் அபரக்கிரியைகளில் ஒன்றாகும். சிரார்த்தம் என்பதன் பொருள் சிரத்தையோடு செய்யவேண்டியது என்பதாகும். இதனை பிதிர்கருமம் எனும் பொருளில் எல்லாப் பிதிர்க்கருமங்களையும் குறிப்பிதற்குப் பயன்படுத்துவர்.[1][2][3] எனினும் சிரார்த்தம் என்பது, ஆட்டைத்திவசம்(வருஷாப்திகம்) அதாவது ஒருவா் இறந்து ஒரு ஆண்டின் பின் செய்யும் சிரார்த்தம், திவசம் ஆட்டைத்திவசத்தை அடுத்து ஆண்டுதோறும் அதே திதியில் செய்யப்படுவது ஆகும். இதனைத் திதி என்றும் கூறுவர்.

கூட்டுச் சிரார்த்தம் செய்யும் காட்சி, ஜெகன்நாத் படித்துறை, கொல்கத்தா

சிரார்த்தம் செய்யும்போது இறந்தவரது ஆன்மா ஈடேற்றம் அடைவதற்கு, பரிபூரண சித்தியின் பொருட்டு அரிசி, உழுந்து, எள், தயிர், பால், தேன், வாழைப்பழம், நெய் எனும் பொருட்கைள உருண்டையாக உருட்டி பிண்டமிடல் இடம்பெறும்.

சிரார்த்த கிரியைகளி்ல் எள்ளும், தண்ணீரும் இறைத்தல் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. தர்ப்பையைக் குறுக்காகப் பிடித்து, அத் தர்ப்பை தர்ப்பப்பை மூலத்திலிருந்து எள்ளுக்கலந்த நீரை பெருவிரல் மூலமாக விழச்செய்வர். அவ்வேளையில் தங்கள் முன்னோர்களின் மூன்று தலைமுறைப் பெயர்கள் சொல்லப்படும்.[4]

தர்ப்பண முடிவிலலே "என் குலப்பிரதிர்களே, பூமியில் விடப்பட்ட இந்த நீரினால் நற்கதியும், திருப்தியும் அடையுங்கள்" என்று கூறி, தர்ப்பை எள்ளுடன் தீர்த்தத்தில் இடப்படும்.

ஒருவர் இறந்த திதியைக் கொண்டே சிரார்த்தம் நிச்சயிக்கப்படுகின்றது. ஒரு மாதத்தில் இரு தடவைகள் சிரார்த்த திதி வந்தால் பின்னைய திதியினைக் கைக்கொண்டு சிரார்த்தம் செய்வது விதி.

உத்தர காமிக ஆகமத்தில் 29வது படலத்தில் சிரார்த்தவிதி கூறப்பட்டுள்ளது.[5]

சிரார்த்தத்தின் முடிவில் பசுக்களுக்கு உணவு வழங்குவது சிறப்பாகக் கருதப்படுகிறது. [6] பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினற்கும், இனத்திற்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம் என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார்

"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை"[7]

இதனையும் காண்கதொகு

பித்துரு உலகம்

அடிக்குறிப்புகள்தொகு

  1. Prasad, R. C. (1995). Sraddha: The Hindu Book of the Dead. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120811925. 
  2. Hindu World. Routledge Worlds. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1134608756. 
  3. Lipner, Julius (2012). Hindus: Their Religious Beliefs and Practices (2 ). Routledge. பக். 267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1135240604. 
  4. Shraddha
  5. url = http://temple.dinamalar.com/news_detail.php?id=11423 | accessdate = 2017-01-05
  6. http://www.hindu.com/2001/07/26/stories/13261289.htm
  7. திருக்குறள். குறள் 43

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரார்த்தம்&oldid=2656784" இருந்து மீள்விக்கப்பட்டது