மாவிளக்கு வழிபாடு

மாவிளக்கு வழிபாடு என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து சமயத்தவர்களின் அம்மன் வழிபாட்டு முறைகளுள் ஒன்று. இடித்தெடுத்த பச்சரிசி, மண்டை வெல்லப் பாகு, ஏலக்காய் போன்றவை கலந்த இனிப்புக் கலவை விளக்கு வடிவில் தயாரிக்கப்படும். இதில் நல்லெண்ணெய் ஊற்றி திரிப் போட்டு விளக்கேற்றப்படும். திருவிழா சமயங்களில் அவரவர் வீட்டில் செய்யப்பட்ட மாவிளக்கு ஊர்வலமாக அம்மன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்படும். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி (வீரவண்டி) மாரியம்மன் கோவிலில் குழந்தைகளைப் படுக்க வைத்து வாழை இலையை அடியில் வைத்து குழந்தைகளின் கை, மார்பு, வயிறு போன்றவற்றில் மாவிளக்குப் போடும் வழக்கம் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாவிளக்கு_வழிபாடு&oldid=2419813" இருந்து மீள்விக்கப்பட்டது