அசோகு
அசோகு | |
---|---|
அசோகு பூக் கொத்து | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Rosids
|
வரிசை: | பபலசு
|
குடும்பம்: | பபசியா
|
பேரினம்: | Saraca
|
இனம்: | S. asoca
|
இருசொற் பெயரீடு | |
Saraca asoca (Roxb.) Wilde | |
வேறு பெயர்கள் | |
Saraca indica L. |
அசோகு அல்லது அசோகம் அல்லது ஆயில (Ashoka tree; Saraca asoca) என்பது பபசியா குடும்பத்தைச் சேர்ந்த கசல்பினியோடே துணைக் குடும்பத் தாவரமாகும்.[1] இம் மரம் இந்திய துணைக் கண்டத்திலும் அதனையொட்டிய பகுதிகளிலும் உள்ள கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்புபட்டது.
விளக்கம்
தொகுஅசோக மரம் மழை அதிகம் உள்ள காடுகளில் பெரிதும் காணப்படுகின்றன. விந்திய மலை தொடரின் தெற்கு மத்திய பகுதிகளில் (ஆந்திர, கர்நாடக, நீலகிரி, மத்திய மேற்கு தொடர்ச்சி மலை) இவைகள் பரவிக் கிடக்கின்றன.
அழகிய தோரணம் போல கவிழ்ந்து தொங்கும் அடர்ந்த இலைகள் , இனிய நாற்றம் உடைய மலர்கள், அசோக மரத்தின் சிறப்பு அம்சங்கள். எபோழுதும் பச்சை பசேல் என்று , சிறிய அடர்த்தியான இலைகளை கொண்டவை.
இதன் பூ பூக்கும் காலம் சுமார் (பிப்ரவரி முதல் அப்ரைல்). அசோக மலர்கள் கனமாகவும் கொத்து கொத்துதாக இருக்கும். இதன் நிறம் ஆரஞ்-மஞ்சள் , காயக்காய சிவப்பு நிறமாக மாறும்.
இவை காட்டு மரம், அனால் அழிந்து போகும் கட்டதில் உள்ளது. தான்தோணியாக தோன்றுவது அரிதாகவே உள்ளது.அனால் தனித்து நட்ட மரங்கள் இப்பவும் மத்திய, கிழக்கு ஹிமாலய அடிவாரத்தில் ,மற்றும் மும்பை வடக்கு பகுதிகளிலும் காணப்படுகின்றன.
சில சாதி(வகை) மரங்களே உள்ளன. ஒரு வகை, பெரிதாகவும் பரந்தும் இருக்கின்றன. இன்னொரு வகைகையான குழாய் வடிவம் கொண்ட மரங்கள் அதிகமாக இப்பொழுது சாகுபடி செய்யபடுகின்றன.
மருத்துவ குணங்கள்
தொகுரத்தபேதி, சீதபேதி, மாதவிலக்குக் கோளாறுகள் (வெள்ளைப்படுதல், மாதவிடாயில் உண்டாகும் வயிற்றுவலி, மாத விலக்கில் அதிக ரத்தப்போக்கு), சர்க்கரை நோய், பித்த நோய்கள், இரத்த அழுத்தம், கருப்பைக் கோளாறுகள் (அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் குழாய்களில் உண்டாகும் குறைபாடுகள்), சிறுநீரக வியாதிகள், சிறுநீரகக் கல் போன்ற வியாதிகளை அசோக மரம் குணமாக்கும்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ashoka - Herb Information
- ↑ "சோகம் நீக்கி சுகம் தரும் அசோகம்". அருண் சின்னையா. நக்கீரன். Archived from the original on 5 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 சூன் 2016.