கிராம தேவதை

கிராமங்களின் காவல் தெய்வம்

கிராம தேவதை (Grama devata) ("கிராமத் தெய்வம்") [1] என்பது பொதுவாக இந்தியாவில் கிராமங்களில் வழிபடப்படும் முதன்மை தெ தெய்வங்களும் விதிவிலக்குகளாக உள்ளன. தர்ம-தாக்கூர் என்ற ஆண் தெய்வம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கருவுறுதல் மற்றும் நோய்க்கான கடவுளாவார்.[2] மற்றொரு உதாரணம் மகாராட்டிராவின் கிராமங்களில் உள்ள கிராமதேவதையான கால பைரவரைக் கூறலாம். இவர் சிவபெருமானின் உக்கிரமான வடிவமாவார். அங்கு இவர் வைரவர் என்று குறிப்பிடப்படுகிறார்.

குடிலோவா கிராம தேவதை முத்தாலம்மன்

குறிப்பாக தென்னிந்தியாவில், ஒரு கிராம தெய்வம் என்பது, கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமத்தின் பாதுகாப்பிற்காக அமைந்திருப்பது என்பது ஒரு பொதுவான முறையாகும்.

தெற்கு ஆசியாவில் காணப்படும் "தாய் தெய்வங்களின் " ஆரம்ப தோற்றம் கிமு 4ஆம் ஆயிரமாண்டு காலத்தைச் சேர்ந்த பெண் சுடுமண் சிலைகளின் வடிவத்தில் மெஹெர்கரில் காணப்படுகிறது. இந்த சிலைகள் "தாய் தெய்வத்தை" பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. சிந்து வெளி நாகரிகத் தளங்களிலிருந்து இதே போன்ற பெண் உருவங்கள் 3வது-2வது ஆயிரமாவது ஆண்டு உருவங்களில் காணப்படுகின்றன. அதில் ஒரு பெண் தனது கருவில் இருந்து தோன்றிய தாவரத்தையும், ஒரு மரத்தில் இருக்கும் ஒரு பெண்ணை (தெய்வமாக நம்பப்படுகிறது) மற்றொரு பெண்ணால் வழிபடுபடுவது போலக் காணப்படுகிறது. இதன் கீழே ஏழு உருவங்கள் உள்ளன. விவசாயத்துடனான அவர்களின் தொடர்பு காரணமாக, பூமியின் ஆவி பற்றிய கருத்து சிந்துவெளி நாகரிக காலத்தில் இருந்ததைப் போலகிடைக்கப்பெற்ற சுடுமண் துண்டுகளிலிருந்து அறியவருகிறது. இந்தத் துண்டு, ஒரு பாராசோலை வைத்திருக்கும் ஒரு உருவத்தைக் காட்டுகிறது. தற்கால கிராம தேவதைகளுக்கு வழங்கப்படுவது போன்ற மண் பானைகள், பழங்கள், பூக்கள் மற்றும் பிற காணிக்கைகளால் வழிபடப்படும் ஒரு தெய்வம் என தெளிவாகத் தெரிகிறது.


கிராம தேவதைகளுடன் தொடர்புடைய பொதுவான உருவப்படங்களின் மற்றொரு குழு சப்தகன்னியர் ("ஏழு தாய்கள்"). இந்த தெய்வங்களின் முதல் குறிப்பு மகாபாரதத்தின் பிற்பகுதியில் கிபி 1 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய அடுக்குகளில் நிகழ்கிறது. மேலும் வேதங்களில் இவர்களின் குறிப்பு இல்லாதது இந்த தெய்வங்களுக்கு வேதம் அல்லாத தோற்றத்தைக் குறிக்கிறது. [3] கருவுறுதல் தெய்வங்களைத் தவிர, பல்வேறு நோய் தெய்வங்களில் மாரியம்மன், மாதா போன்ற விரும்பத்தகாத உடல் பண்புகளுடன் விவரிக்கப்பட்ட தெய்வங்களும் அடங்கும். இது போன்ற பெண் தெய்வங்களுக்கு உதாரணமாக சிந்து வெளி காலத்தின் தனது தலைமுடியில் ஆயுதம் ஏந்திய ஒரு தெய்வத்தை குறிப்பிடலாம். இதேபோல், இந்து மதத்தில் உள்வாங்கப்பட்ட தெய்வமான துர்க்கை போன்ற தெய்வங்கள், 1 ஆம் நூற்றாண்டில் தோன்றின.[3]

எடுத்துக்காட்டுகள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Fuller, C. J. (March 1988). "The Hindu Pantheon and the Legitimation of Hierarchy". Man 23 (1): 22–39. doi:10.2307/2803031. https://www.jstor.org/stable/2803031. பார்த்த நாள்: 5 March 2021. 
  2. "Dharma-Thakur | Indian deity". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-14.
  3. 3.0 3.1 Elgood, Heather (2004-09-01). "Exploring the roots of village Hinduism in South Asia". World Archaeology 36 (3): 326–342. doi:10.1080/0043824042000282777. பன்னாட்டுத் தர தொடர் எண்:0043-8243. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராம_தேவதை&oldid=3756660" இலிருந்து மீள்விக்கப்பட்டது