இந்து சமயக் கோயில்களில் மூலவர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் உள்ள தரைப்பகுதி கருவறை (About this soundஒலிப்பு ) எனப்படுகிறது. வேத காலத்தில் இவை சமசதுரம், வட்டம், முக்கோணம் எனும் மூன்று விதமான வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சமசதுரம் தேவலோகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் அக்னி அல்லது மண்ணுலகத்துடனும் தொடர்புப்படுத்தப்பட்டன. சதுரமும் வட்டமும் இந்தியக் கோயில்களுக்கு அடிப்படையாக அமைந்தன. இதில் வட்ட வடிவம் இறந்தவர்களோடு தொடர்பு படுத்தப்பட்டதால் புத்த ஸ்தூபிகளுக்கும், பள்ளிப்படைக் கோயில்களுக்கும் அடிப்படையாய் அமைந்தன. ஒரு சில கோயில்களில் வட்டவடிவத் தரையமைப்பு உண்டு. குறிப்பாக மதுரை, அழகர்கோயிலுள்ள அழகர் கோயிலின் கருவறை வட்ட வடிவமுடையது.

பத்ரிநாத் கோயில் கருவறை
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவறை&oldid=2553894" இருந்து மீள்விக்கப்பட்டது