உபவேதங்கள்

உபவேதங்கள் பல்வேறு துறை சார்ந்த தொழில்நுட்பத் தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.[1][2][3] தலைமுறை தலைமுறையாக வேதகால முனிவர்கள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே நான்கு உபவேதங்களாக அறியப்படுகின்றன.

ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகிய நூல்கள் நான்கும் முக்கியமான வேத நூல்கள் எனப்படுகின்றன. அவற்றிற்குத் துணையாக தோன்றிய நால்வகை நூல்கள் உபவேதம் எனப்படுகின்றன. அவை, மருத்துவ நூலாகிய ஆயுர்வேதம், அனைத்து படைகலன்களையும் பற்றியும் அவற்றை பயிலும் முறையைப் பற்றியும் கூறும் தனுர்வேதம், இசையின் மூலம் கடவுளர்களை வழிபடும் முறையை தெரிவிக்கும் காந்தர்வ வேதம், செல்வத்தை ஈட்டுதல், காத்தல், வகைப்படுத்திச் செலவு செய்தல், பயன் துய்த்தல் போன்றவற்றை உணர்த்தும் நூல் அர்த்தசாஸ்திரம் மற்றும் சில்ப வேதம் என்பனவாகும்.

வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகிறது.

உபவேதங்கள்

தொகு
  1. ஆயுர்வேதம் – வாழ்க்கை குறித்த அறிவியல். இது அதர்வண வேதத்தை சார்ந்தது. .[4][5]
  2. சில்ப வேதம்- அதர்வண வேதத்தின் உபவேதம். இது கட்டடக் கலையை விவரிக்கின்றது.
  3. தனுர் வேதம் – போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல், இது ரிக் வேதத்தைச் சார்ந்தது.
  4. காந்தர்வ வேதம் – நுண்கலைகள் குறித்த அறிவியல். இது சாம வேதத்தைச் சார்ந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Monier-Williams 2006, ப. 207. [1] Accessed 5 April 2007.
  2. Apte 1965, ப. 293.
  3. "Upaveda". ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
  4. "ORIGIN AND DEVELOPMENT OF AYURVEDA: (A BRIEF HISTORY)". US National Library of Medicine National Institutes of Health. Anc Sci Life. 1981 Jul-Sep; 1(1): 1–7.
  5. Frawley, David; Ranade, Subhash (2001). Ayurveda, Nature's Medicine. Lotus Press. p. 11. பார்க்கப்பட்ட நாள் 6 January 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உபவேதங்கள்&oldid=4056519" இலிருந்து மீள்விக்கப்பட்டது