ஆல்

தாவர இனம்
(ஆலமரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆல்
ஆலமரம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
மக்னோலியோப்சிடா
வரிசை:
உருட்டிக்காலெசு
குடும்பம்:
மொராசியே
பேரினம்:
பீகசு (Ficus)
துணைப்பேரினம்:
பெங்காலென்சிசு (benghalensis)
இருசொற் பெயரீடு
பீகசு பெங்காலென்சிசு (Ficus benghalensis)

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மர வகையாகும். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன. ஆலமரம் இந்தியாவின் தேசிய மரமாகும்.

பெயரியல்

தொகு

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். அகல் என்னும் சொல் ஆல் என மருவி வழங்கப்படுகிறது. அகன்ற அதன் கிளைகளைத் தாங்குவதற்கு அதன் விழுதுகள் பயன்படுகின்றன. கிளைகளிலிருந்து இவை கீழ்நோக்கி இறங்குவதால் (வீழ்வதால்) இதனை வீழ் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[1]

பண்புகள்

தொகு

மற்ற அத்தி வகைகளைப் போலவே, ஆலமரங்களும் சிறிய பழங்களை ஈனுகின்றன. இந்த பழங்கள் அத்தி குளவிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவை வழங்குகிறது. இந்த பூச்சிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.[2] ஆல் விதைகள் சிறியவை, பழங்களை உண்ணும் பறவைகள் ஆலமரங்களின் விதைகளை பரப்ப உதவுகின்றன. மேலும் பெரும்பாலான ஆலமரங்கள் வனப்பகுதியில் வளர்ந்தாலும், பல விதைகள் மற்ற மரங்களின் கிளைகள் மற்றும் தண்டுகள் அல்லது கட்டிடங்களில் மீது விழுகின்றன, மேலும் அவை முளைக்கும் போது வேர்கள் வேகமாக வளர்கின்றன.

 
ஆலமரம்

ஆலமரத்தின் இலைகள் பெரியதாகவும், தோல் போலவும், பளபளப்பாகவும், பச்சை நிறமாகவும், நீள்வட்டமாகவும் இருக்கும். பெரும்பாலான அத்தி மரங்களைப் போலவே, இலை மொட்டு இரண்டு பெரிய செதில்களால் மூடப்பட்டிருக்கும். இலை வளரும்போது செதில்கள் அறுந்துவிடும். இளம் இலைகள் கவர்ச்சியான சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளன.[3]

முதிர்ந்த ஆலமரங்கள் தடிமனான விழுதுகளைக் கொண்டிருக்கின்றன. இந்த விழுதுகள் வளர்ந்து தண்டுகளை போலாவே மண்ணில் புதைந்து, மரத்திற்கு வலிமையை தருகின்றன. ஒரு ஆலமரம் ஆயிரக்கணக்கான விழுதுகளைக் கொண்டிருக்கலாம்.[4] இந்த விழுதுகள் அறுபது அடி (பதினெட்டு மீட்டர்) உயரம் வரை வளரக்கூடியவை.[5][6] ஆல மரங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை.[7] சென்னை அடையாற்றில் 450 ஆண்டுகள் கடந்த பழமையான ஆலமரமொன்று பாதுகாக்கபட்டு வருகின்றது.[8]

பண்பாடு

தொகு

பல ஆசிய சமயங்கள் மற்றும் புராணங்களில் ஆலமரங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன இந்து சமயத்தில், ஆலமரத்தின் இலை கிருட்டிணன் ஓய்வெடுக்கும் இடம் என்று கூறப்படுகிறது. சிவன் ஆலமர் செல்வன் எனப் போற்றப்படுகிறான்.[9] திருஅன்பிலாலந்துறை, பழுவூர், திருவாலம்பொழில் முதலிய சிவத்தலங்களில் ஆலமரம் தலமரமாக விளங்குகின்றது.[10] பௌத்த நூல்களில் பல இடங்களில் ஆலமரம் குறிப்பிடப்படுகின்றன.[11]

கடந்த காலங்களில் கிராமக் கூட்டங்கள் ஆலமரத்தடியில் நடைபெற்றன. இந்திய தேசிய சின்னங்களில் ஆலமரம் தேசிய சின்னமாக உள்ளது.[12] ஆலும் வேலும் பல்லுக்குறுதி, ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி வாழ்க எனப் பழமொழிகளில் மற்றும் வாழ்த்துகளிலும் இது குறிப்பிடப்பட்டள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. :மரத்தின் உறுப்புகளில் ஒன்று வீழ் - தொல்காப்பியம் மரபியல் 90
    ஐது வீழ் இகுபெயல் (மழை விழுதல்) - சிறுபாணாற்றுப்படை 8
  2. Zhang, Xingtan; Wang, Gang; Zhang, Shengcheng; Chen, Shuai; Wang, Yibin; Wen, Ping; Ma, Xiaokai; Shi, Yan et al. (12 November 2020). "Genomes of the Banyan Tree and Pollinator Wasp Provide Insights into Fig-Wasp Coevolution". Cell 183 (4): 875–889.e17. doi:10.1016/j.cell.2020.09.043. பன்னாட்டுத் தர தொடர் எண்:1097-4172. பப்மெட்:33035453. https://pubmed.ncbi.nlm.nih.gov/33035453/. 
  3. "The Banyan Tree". The Lovely Plants. 14 September 2010. Archived from the original on 16 March 2019.
  4. Allen, Richard; Baker, Kimbal (2009). Australia's Remarkable Trees. Melbourne: Miegunyah Press. p. 100.
  5. Florist and Pomologist, (February 1867) page 37
  6. The Garden (London),Volume 3 (8 February 1873) page 115
  7. "Roots of banyan, peepal trees identified". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 December 2022.
  8. "சென்னை அடையாறு ஆலமரம் 450 வயதை கடந்தது மாலைமலர் செப்டம்பர் 17 2013". Archived from the original on 2013-09-18. பார்க்கப்பட்ட நாள் 2013-09-23.
  9. ஆலமர் செல்வன் அணிசல் பெருவிறல் கலித்தொகை - 81
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-28. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.
  11. Rhys Davids, T. W.; Stede, William, eds. (1921–1925). The Pali Text Society's Pali-English dictionary. Chipstead: Pali Text Society. p. 355, entry "Nigrodha,". பார்க்கப்பட்ட நாள் 22 November 2008.
  12. "National Tree". Know India. Government of India. Archived from the original on 13 February 2016. பார்க்கப்பட்ட நாள் 16 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்&oldid=3921740" இலிருந்து மீள்விக்கப்பட்டது