இந்திய தேசிய சின்னங்கள்
இந்திய தேசிய சின்னங்கள் (National symbols of India) என்பது இந்தியாவின் அதிகாரபூர்வ சின்னங்களை குறிப்பதாகும். இந்திய குடியரசு, வரலாற்று ஆவணம், கொடி, சின்னம், தேசிய கீதம், நினைவு கோபுரம் மற்றும் பல தேசிய கதாநாயகர்கள் உட்பட பல அதிகாரப்பூர்வ தேசிய சின்னங்களைக் கொண்டுள்ளது. தேசியக் கொடியின் வடிவமைப்பு 1947ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் சற்று முன்பு அரசியலமைப்பு சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1] தேசிய விலங்கு, பறவை, பழம் மற்றும் மரம் ஆகியவை பல்வேறு சந்தர்ப்பங்களில் நியமிக்கப்பட்ட பிற சின்னங்கள் ஆகும்.[2]
தேசியச் சின்னம்
தொகுஇந்தியாவின் தேசியச் சின்னம், சாரநாத்தில் உள்ள அசோகத் தூணிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் நான்முகச் சிங்கமும் வலப்பக்கம் காளையும் இடப்பக்கம் குதிரையும் இருக்கும். மேலும் காளை, நாட்டின் கடின உழைப்பு மற்றும் உறுதியையும் குதிரை, ஆற்றல் மற்றும் வேகத்தையும் குறிக்கின்றன. இதன் பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜயதே” என்ற வார்த்தைகள் கொண்ட தேவநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இஃது இந்திய தேசியச் சின்னமாக 1950-ஆம் ஆண்டு சனவரி 26-இல் இந்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[3] |-
பயன்பாடு
தொகுதேசியச் சின்னம் அமைச்சர்கள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் நீல வண்ணத்திலும், அதிகாரிகள் பயன்படுத்தும் எழுதுதாள்களில் சிவப்பு வண்ணத்திலும் அச்சிடப்பட வேண்டும். மக்களவை உறுப்பினர்கள் பச்சை வண்ணத்திலும், மாநிலங்களவை உறுப்பினர்கள் சிவப்பு வண்ணத்திலும் தேசியச் சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும். தேசியச் சின்னங்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். இந்திய தேசிய சின்னங்களை அவமதிப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்.
தேசியக் கொடி
தொகுகடும் காவி, கடும் பச்சை, மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் அடங்கிய மூவனணக் கொடியே இந்தியாவின் தேசியக் கொடி. வெண்பட்டையின் நடுவே கடல் நீல வண்ணம் கொண்ட 24 அரும்புக் கால்களை உடைய அசோக சக்கரம் ஒன்று உள்ளது.காவி நிறம் தைரியம் மற்றும் தியாகத்தையும்,வெண்மை நிறம் உண்மை மற்றும் அமைதியையும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் வீரத்தையும் குறிப்பதாக கற்பிக்கப்பட்டது. மூவர்ண கொடியை அரசியல் நிர்ணய சபை 1947 ஜூலை 22 ல் ஒருமித்த கருத்துடன் அங்கீகரித்தது.[4] ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா என்பவர் தேசிய கொடியை வடிவமைத்தார்.
தேசிய கீதம்
தொகுஇந்திய அரசியமைப்பு குழு 1950 ஜனவரி 24 ல் ”ஜன கண மன ” பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கிகரித்தது.[5] 1911 டிசம்பர் 27ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாகப் பாடப்பட்டது. 1912ல் தாகூரின் ”தத்துவ போதினி” பத்திரிக்கையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது. இந்த பாடலை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடிமுடிக்க வேண்டும்.
தேசியப் பாடல்
தொகுதேசிய கீதத்தை விட வந்தே மாதரம் எனத் தொடங்கும் தேசியப்பாடல் பழமையானது. 1882 ல் பங்கிம் சந்திரனின் ”ஆனந்த மட்” நூல் வெளியானது. எனவே இதற்கு முன்பே இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.1896 ல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன்முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் இரவீந்திர நாத் தாகூர்.[6] |- தேசியப் பாடலின் ஸ்ரீஅரவிந்தரின் ஆங்கில மொழிப்பெயர்ப்பின் தமிழ் பொருள்.
“ | அம்மா நான் வணங்குகிறேன். இனிய நீர்ப் பெருக்கினை, இன் கனி வளத்தினை, தனி நறுமலயத் தண்காற் சிறப்பினை, பைந்நிறப் படினம் பரவிய வடிவினை வணங்குகிறேன். வெண்ணிலாக் கதிர் மகிழ்விரித்திடும் இரவின் மலர் மணிப் பூந்திகழ் மரன் பல செறிந்தனை, குறுநகையின் செலார் குலவிய மாண்பினை , நல்குவை இன்பம், வரம் பல நல்குவை அம்மா வணங்குகிறேன். | ” |
தேசிய நாட்காட்டி
தொகுசக வருட நாட்காட்டி 1957 ஆண்டு மார்ச் 22 முதல் தேசிய நாட்காட்டியாக அங்கீகரிக்கப்பட்டது. சக ஆண்டு 365 நாள்களை கொண்டது. சாதாரண ஆண்டில் சைத்ரா முதல் தேதி மார்ச் 22 ஆகும். லீப் வருடத்தில் முதல் தேதி மார்ச் 21 ஆகும். தேசிய நாள்காட்டி சக ஆண்டு 1879 ல் சைத்ரா முதல் நாளில் தொடங்கியது.[7]
தேசிய விலங்கு
தொகுஊன் உண்ணும் விலங்குகளில் கவர்ச்சியும், கம்பீரமும் மிகுந்த புலி இந்தியாவின் தேசிய விலங்கு ஆகும். 1972 ல் புலி இந்தியாவின் தேசிய விலங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. தேசிய விலங்கை கொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும். 2001 ல் புலிகளின் எண்ணிக்கை 3642 ஆக இருந்தது.ஆனால் இப்போது 1411 ஆக குறைந்துள்ளது. 1973ல் தொடங்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத் திட்டம் ஒரு முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டமாகும்.[8]
தேசியப் பறவை
தொகுஇந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பறவைகளில் மிக கவர்ச்சியான மயிலே இந்தியாவின் தேசிய பறவை ஆகும். 1963 ல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதிநூலான ரிக் வேதத்தில் உள்ளன. இது 2500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் காணப்படும்.[9]
தேசிய காய்கறி
தொகுமஞ்சள் பூசணி
தேசிய மொழி
தொகுஅரசியல் சட்டத்தின் பிரிவு 343 (1) ன் படி இந்தி மொழியே நாட்டின் அதிகார பூர்வ அலுவல் மொழி. இத்துடன் ஆங்கிலத்தையும் அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ளது. ஆனாலும் அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணைப் படி தற்போது இந்தி, தமிழ், மலையாளம், வங்காளி, அசாமி, தெலுங்கு,மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, குஜராத்தி, காஷ்மீரி, உருது, கன்னடம், கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி, தோஹ்ரி, போடோ, சந்தாலி, மைதிலி என்னும் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன.
பிற சின்னங்கள
தொகுபெயர் | படம் | விளக்கம் | |
---|---|---|---|
தேசிய நாட்காட்டி | இந்திய தேசிய நாட்காட்டி | இந்திய தேசிய நாட்காட்டி, சில நேரங்களில் ஷாலிவாஹன ஷகா காலண்டர் என்று அழைக்கப்படுகிறது. அகில இந்திய வானொலியின் செய்தி ஒலிபரப்புகளிலும், இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்படும் நாட்காட்டிகள் மற்றும் தகவல்தொடர்புகளிலும், கிரிகோரியன் நாட்காட்டியுடன், தி கெஜட் ஆஃப் இந்தியாவால் பயன்படுத்தப்படுகிறது. | |
தேசிய பாரம்பரிய விலங்கு | இந்திய யானை | இந்திய யானை 22 அக்டோபர் 2010 முதல் இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்காக உள்ளது. நாட்டின் உள்ள 29,000 யானைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் யானையை தேசிய பாரம்பரிய விலங்கு என அறிவித்தது. சுற்றுச்சூழல் உணர்திறன் சின்னமாக இது நமது பன்மை கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் வாய்வழி கதைகளில் இதன் மையத்தன்மைக்கான அங்கீகாரத்தையும் குறிக்கும்" என்று பணிக்குழு தனது அறிக்கையில் எழுதியது.. | |
தேசிய நீர்வாழ் விலங்கு | இந்திய ஆற்று ஓங்கில் | தெற்காசிய ஆற்று ஓங்கில் (பிளாடானிசுடா காஞ்செடிகா) என்பது அழிந்து வரும் நன்னீர் அல்லது ஆற்று ஓங்கில் ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் பகுதியில் காணப்படுகிறது. இது கங்கை நதி ஓங்கில் மற்றும் சிந்து நதி ஓங்கில் என இரண்டு துணையினங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கங்கை நதி ஓங்கில் முதன்மையாக கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் மற்றும் இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் அவற்றின் துணை நதிகளில் காணப்படுகிறது. அதே சமயம் சிந்து நதி ஓங்கில் இப்போது பாக்கித்தானில் உள்ள சிந்து நதியின் பிரதான கால்வாயிலும் பியாஸ் நதியிலும் மட்டுமே காணப்படுகிறது. இந்தியாவின் பஞ்சாபில் உள்ள சிந்து. கங்கை நதி ஓங்கில் இதன் தேசிய நீர்வாழ் விலங்காக இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது | |
தேசிய ஊர்வன | இராஜ நாகம் | பாம்பு உண்ணி (ஒபியோபாகசு ஹன்னா) அல்லது காட்டு நாகம், இந்தியாவின் தேசிய ஊர்வன ஆகும். இந்த காட்டு நாகம், இந்தியாவின் காடுகளிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. காட்டு நாகம் உலகின் மிக நீளமான நச்சுப் பாம்பு என்று அறியப்படுகிறது. இராஜ நாகம் 25 ஆண்டுகள் வரை வாழக்கூடியது மற்றும் 19 அடி வரை வளரும் திறன் கொண்டது.[10]
இந்து மதத்தில் இராஜ நாகப்பாம்பு தெய்வீகமாக கருதப்படுகிறது மற்றும் நாகம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமான் பெரும்பாலும் கழுத்தில் ஒரு நாகப்பாம்புடன் காட்சியளிப்பார். | |
தேசிய மலர்[11] | தாமரை | தாமரை (நெலும்போ நியூசிபெரா கேர்ட்ன்) இந்தியாவின் தேசிய மலர் ஆகும். இது ஒரு புனிதமான மலர் மற்றும் பண்டைய இந்தியாவின் கலை மற்றும் புராணங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. பழங்காலத்திலிருந்தே இந்திய கலாச்சாரத்தின் ஒரு நல்ல அடையாளமாக இருந்து வருகிறது. | |
தேசிய மரம் | ஆலமரம் | இந்திய ஆலமரம் (பிசுகசு பெங்காலென்சிசு) வேரூன்றி புதிய மரங்களை உருவாக்கி பெரிய பரப்பில் வளர்கிறது. இந்த பண்பு மற்றும் அதன் நீண்ட ஆயுட்காலம் காரணமாக, ஆலமரம் அழியாததாக கருதப்படுகிறது. இந்தியாவின் தொன்மங்கள் மற்றும் புனைவுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக ஆலமரம் உள்ளது.[12][13] | |
தேசிய பழம் | மா[14] | மாம்பழம் (மேங்கிபெரா இண்டிகா) இந்தியாவில் தோன்றியது. இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட பழ வகைகள் உள்ளன. பழங்களின் அரசன் என்று மாம்பழம் குறிப்பிடப்படுகிறது.[15] | |
தேசிய ஆறு | கங்கை[16] | கங்கை இதன் ஓட்டப்பாதையில் வாழும் இலட்சக் கணக்கான மக்களுக்கு ஒரு உயிர்நாடி. இது ஒரு புனித நதி மற்றும் இந்து மதத்தில் கங்கா தெய்வமாக வழிபடப்படுகிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது; பல முன்னாள் மாகாண அல்லது ஏகாதிபத்திய தலைநகரங்கள் (பிரயாக்ராஜ், தாக்கா, பஹரம்பூர், பிக்ரம்பூர், கம்பில்யா, கன்னோஜ், காரா, காசி, கொல்கத்தா, முர்சிதாபாத், முங்கர், பாடலிபுத்ரா மற்றும் சோனார்கான் போன்றவை) இதன் கரையில் அமைந்துள்ளன. |
மேற்கோள்கள்
தொகு- ↑ "National Flag". இந்திய அரசு. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Identity Elements of India". knowindia.gov.in. Archived from the original on 2019-11-11. பார்க்கப்பட்ட நாள் 2022-08-17.
- ↑ "State Emblem". Government of India. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Flag". Government of India. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Anthem". Government of India. Archived from the original on 15 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Song". Government of India. Archived from the original on 15 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Calendar". Government of India. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Animal". Government of India. Archived from the original on 22 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Bird". Government of India. Archived from the original on 15 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National symbols of India | Indian National Symbols". 18 Mar 2022.
- ↑ "National Flower". Government of India. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Tree". இந்திய அரசு. Archived from the original on 22 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2012.
- ↑ Gahlot, Indrajit (2014-09-05). "Destination Of The Week : Banyan Tree amritsar". Never Tired of Travelling (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-31.
- ↑ "National Fruit". Government of India. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "National Fruit". இந்திய அரசு. Archived from the original on 22 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 3 ஏப்பிரல் 2012.
- ↑ "National River". Government of India. Archived from the original on 25 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
உசாத்துணை
தொகு- மனோரமா இயர் புக் - 2009
வெளி இணைப்புகள்
தொகு- knowindia.gov.in – National Symbols பரணிடப்பட்டது 2014-02-10 at the வந்தவழி இயந்திரம்
- National Symbols Govt. of India Official website.